இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு

6/3/2025 5:18:12 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

பொள்ளாச்சி: கோவையில் 4 பேரை கொன்று பிடிபட்ட யானை, லாரியில் கொண்டு செல்லப்பட்டு டாப்சிலிப் வனத்தில் விடுவிக்கப்பட்டது.கோவை எட்டிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை போத்தனூர் கணேசபுரம் மூரண்டம்மன் கோயில் வீதியில் நேற்று அதிகாலை புகுந்தது.அங்கு வீட்டு வாசலில் படுத்து தூங்கிய விஜயகுமார், மகள் காயத்ரி(12) ஆகியோரை தாக்கியது. படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் சிறுமி காயத்ரி பரிதாபமாக இறந்தாள். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் பஜனை கோயில் வீதியில் புகுந்த யானை, அங்கு வாக்கிங் சென்ற பாலசுப்ரமணியம் மனைவி நாகரத்தினம்(50), மாரியப்பன் மனைவி ஜோதிமணி(60) ஆகியோரை மிதித்து கொன்றது.

அங்கிருந்து வெள்ளலூர் மொட்டுக்கடை ஓடை பகுதிக்கு சென்ற யானை அங்கும் நாகராஜ் என்பவரை துரத்தி தாக்கியது. பின்னர் குப்பணகவுண்டர் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயி பழனிசாமி(73)யை தூக்கி வீசி கொன்றது.யானை 4 பேரை கொன்ற தகவல் வெளியானதும், கோவை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர், போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஓடையில் பதுங்கி நின்ற யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மதியம் 2.40 மணிக்கு சாடிவயல் கும்கி யானை பாரி உதவியுடன், காட்டு யானை லாரியில் ஏற்றப்பட்டது. இந்த யானையை வனத்தில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.பின்னர், டாப்சிலிப் புறப்பட்ட யானைக்கு இரவு 7.15 மணியளவில் சேத்துமடை எடைமேடையில் எடை பரிசோதனை செய்யப்பட்டது. யானையை குளிர்விக்க உடல்முழுவதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. 8 மணிக்கு டாப்சிலிப் வந்த யானை, அங்கிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள யானைகுன்று பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நள்ளிரவு 11.30 மணியளவில், அடர்வனத்தில் லாரி நிறுத்தப்பட்டு பின்கதவு திறக்கப்பட்டது. மயக்கம் தெளிந்திருந்த காட்டு யானை, லாரியில் இருந்து இறங்கியது. தயாராக நின்ற டாப்சிலிப் கும்கிகள் சலீமும், ராமும் அந்த யானையை தள்ளிவிட்டு வனத்துக்குள் போக வைத்தன. சிறிது நேரத்தில் காட்டு யானை வனத்துக்குள் சென்றுவிட்டது. இதை உறுதி செய்தபின், வனத்துறை டாக்டர் மனோகரன், வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் குழுவினர் டாப்சிலிப் திரும்பினர்.வனத்துக்குள் சென்ற யானை மீண்டும் திரும்பி வருகிறதா என்பதை கண்காணிக்க வனச்சரகர் கிருஷ்ணசாமி தலைமையில் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 10பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 15 நாட்களுக்கு இரவு பகலாக கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.


மேலும் சில
  • காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா ஜூலை 5ல் துவக்கம்



  • கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை போராட்டம்: விவசாய சங்கங்கள் முடிவு



  • தஞ்சை, முத்துப்பேட்டையில் மதுக்கடைகளுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை



  • திருச்செந்தூரில் நாளை விசாகத் திருவிழா



  • கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 32 நாள் தொடர் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு



  • 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளி சாதனை



  • டெல்டாவில் கொட்டியது மழை



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்



  • ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி



  • அதிமுக ஆட்சியில் ஒரு பாலமாவது கட்டியது உண்டா? துரைமுருகன் கேள்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]