இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு

6/3/2025 5:15:39 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

செய்யூர்: மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதியதில் சிறுமி உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி இன்று காலை 6 மணியளவில் அரசு பஸ் (த.எண்.டி-1) சென்று கொண்டிருந்தது. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மதுராந்தகம் அருகே அத்திமணம் தேசியநெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென பிரேக் டவுன் ஆனதால் பஸ்சை சாலையோரமாக டிரைவர் நிறுத்தினார். இதில் வந்த பயணிகள், மாற்று பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது அவ்வழியாக திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மணல் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடி, பழுதாகி நின்றிருந்த அந்த பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது. இதில் பஸ், வேகமாக முன்னோக்கி சென்றதில் அங்கு சாலையில் மாற்று பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது ஏறி இறங்கியது. திருவண்ணாமலை குலவை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (50), மதுராந்தகம் அரும்புலியூரை சேர்ந்த இலக்கியா (12) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.  மருத்துவமனையில் மதுராந்தகத்தை சேர்ந்த மேரிலில்லி (36) சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடைபெற்றதும் மணல் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 2 பேரின் சடலத்தையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இவ்விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா ஜூலை 5ல் துவக்கம்



  • கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை போராட்டம்: விவசாய சங்கங்கள் முடிவு



  • தஞ்சை, முத்துப்பேட்டையில் மதுக்கடைகளுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை



  • திருச்செந்தூரில் நாளை விசாகத் திருவிழா



  • கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 32 நாள் தொடர் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு



  • 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளி சாதனை



  • டெல்டாவில் கொட்டியது மழை



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்



  • ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி



  • அதிமுக ஆட்சியில் ஒரு பாலமாவது கட்டியது உண்டா? துரைமுருகன் கேள்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]