இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி

6/2/2025 3:53:56 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

மணிலா: பிலின்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நட்சத்திர விடுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 36 பேர் பலியாயினர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தலைநகர் மணிலாவில் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இங்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்வது வழக்கம். இங்கு உள்ள சூதாட்ட கூடத்தில் மர்ம ஆசாமி ஒருவன் இன்று அதிகாலை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். உடனடியாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு ஆசாமி நடத்திய கோர தாக்குதலில் 36 பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து விடுதி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. போலீசார் சுற்றி வளைத்ததையடுத்து ஆசாமி தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்து 36 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு காரணமாக தீ பிடித்து எரிந்ததால் அச்சம் காரணமாக மக்கள் அவசரமாக கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்றதால் நெரிசலில் சிக்கியதால்தான் அதிகமானோர் பலியாக நேர்ந்ததாக மணிலா போலீசார் தெரிவித்துள்ளனர். சூதாட்ட விடுதியை கொள்ளையடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: கூடங்குளத்தில் புதிய அணுஉலைகள் குறித்து ஆலோசனை



  • காபூலில் பயங்கரம் இந்திய தூதரகம் அருகே கார் குண்டு வெடிப்பு: 50 பேர் பரிதாப பலி?



  • ஈராக்கில் பயங்கரம் கார்குண்டு தாக்குதல் 13 பேர் பரிதாப பலி: 30 பேர் படுகாயம்



  • ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல்- மோடி சந்திப்பு வர்த்தகம், தீவிரவாத தடுப்பு குறித்து ஆலோசனை



  • பிரேசிலில் சுரங்கத்தின் வழியாக 91 கைதிகள் தப்பினர்



  • இஸ்ரேலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கையை உதறிய மனைவி மெலினா



  • இங்கிலாந்தில் இன்று காலை குண்டுவெடிப்பு: 19 பேர் பரிதாப பலி 50 பேர் படுகாயம்: தீவிரவாதிகள் தாக்குதல்



  • உளவாளி என்ற சந்தேகத்தில் பாகிஸ்தானில் கைதான இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு



  • பப்புவா நியூகினியாவில் பயங்கரம்: 60 கைதிகள் சிறையை உடைத்து தப்பி ஓட்டம்



  • ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார் ஹபீஸ் சயீத்: பாக். மழுப்பல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]