இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பிரம்மாண்ட பேரணிக்கு லாலு பிரசாத் ஏற்பாடு: அகிலேஷ், மாயாவதி பங்கேற்பு

6/1/2025 5:13:29 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

அக்ரா: மத்தியில் ஆளும் பாஜ அரசுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில், பீகாரில் பிரம்மாண்ட பேரணிக்கு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் ஏற்பாடு  செய்துள்ளார். ஆகஸ்டு மாதம் 27ம் தேதி நடைபெறும் இந்த பேரணியில், உத்தரபிரதேச அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அகிலேஷ்,  மாயாவதி பங்கேற்க உள்ளனர்.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அங்கம் வகிக்கிறது. லாலுவின் இரண்டு  மகன்கள் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், மாட்டுத்தீவன ஊழல், குடும்பத்தினரின் முறைகேடான சொத்துக்கள் குறித்து,  பீகாரில் எதிர்க்கட்சியாக விளங்கும் பாஜ பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. தன்னை மிரட்டுவதற்காக குடும்பத்தினர் மீது பொய் வழக்குகள்  போடப்படுவதாக லாலு பிரசாத் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், தேசிய அளவில் பாஜவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் லாலு பிரசாத்  ஈடுபட்டுள்ளார். இதற்காக வருகிற ஆகஸ்டு மாதம் 27ம் தேதியன்று பீகாரில் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளார். இதில், காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜ தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.  அகிலேஷின் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை படுதோல்வியை சந்தித்தன.

இந்நிலையில், பீகாரில் நிதிஷ்குமாருடன் இணைந்து பாஜவை வீழ்த்தியது போல், வரும் காலத்தில் மாயாவதி, அகிலேஷ் கூட்டணி அமைத்து  தேர்தலை சந்திக்க வேண்டும் என லாலு பிரசாத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில்தான் லாலு பிரசாத் நடத்தும் பேரணியில் இருவரும்  பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கவர்னரை தொகுதிக்குள் விடாதீர்கள் - நாராயணசாமி முதல்வர் வெற்றுக் கூச்சல் போடுகிறார் - கிரண்பேடி: புதுச்சேரியில் உச்சகட்ட மோதல்



  • சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை



  • ‘நான் ரப்பர் ஸ்டாம்ப் கவர்னர் இல்லை’ நாராயணசாமிக்கு கிரண்பேடி பதிலடி



  • என்டிடிவி தொலைக்காட்சி இயக்குனர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு: டெல்லியில் பரபரப்பு



  • 3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு



  • தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு



  • ஹாலிவுட் பாணியில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை : சிஆர்பிஎப் முகாமை தாக்கிய 4 தீவிரவாதிகள் சுட்டு கொலை



  • எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம், பரிவர்த்தனை : கட்டணங்கள் திடீர் மாற்றி அமைப்பு



  • சிக்னல் கிடைக்கவில்லை மரத்தில் ஏறி செல்போன் பேசிய மத்திய அமைச்சர்



  • ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்த விஜய் மல்லையா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]