மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு
6/1/2025 5:11:39 PM
புதுடெல்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இருமுறை மாற்றி வருகின்றன. இந்த வகையில் இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு. 1.23 காசுகளும், டீசல் 89 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 79 குறைக்கப்பட்டு ரூ. 559.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதே சமயம் மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ. 430.27 லிருந்து ரூ. 3.88 உயர்த்தப்பட்டு ரூ. 434.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.