இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்? தமிழக அரசு ஆலோசனை

6/1/2025 3:49:43 PM
மணிலா நட்சத்திர விடுதியில் தீவிரவாதி சரமாரி துப்பாக்கி சூடு : 36 சுற்றுலா பயணிகள் பரிதாப பலி கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியை கோர்ட் அபராதமாக விதித்தது. அதுபோல ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 128 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அந்த சொத்துகளில் 68 சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்கும்படி கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமாக உள்ள அந்த 68 சொத்துகளும் உள்ளன. அந்த சொத்துகளை தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பேரில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு உரிய குறிப்பிட்ட சொத்துகளை கையகப்படுத்த 6 மாவட்ட கலெக்டர்களுக்கு தனித்தனியே தமிழக அரசு கடிதம் அனுப்பியது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளை, தனி அதிகாரிகளாக நியமனம் செய்து 68 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட உள்ளன. 6 மாவட்டங்களிலும் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான பணி விரைவில் முடிக்கப்படும் என்று தெரிகிறது.  

இந்த நிலையில் 68 சொத்துகளை அரசுடமையாக்கும்  நடவடிக்கைகளை இந்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும்  என்று கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. எனவே 6 மாவட்ட கலெக்டர்களும் இதில்  தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பின்னர் அந்த இடங்களில் “இது அரசுக்கு சொந்தமான இடம்“ என்ற போர்டு வைக்கப்படும். அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலாவின் எந்தெந்த சொத்துகள் அரசுடமையாகிறது என்ற முழு விபரமும் தெரிய வரும். பறிமுதல் செய்யப்படும் 68 சொத்துகளில் கணிசமானவை அரசு துறைகளுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ளவற்றை ஏலத்தில் விட்டு விடுவார்கள் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளளர். இது குறித்த இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கும்.

பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள 68 சொத்துகளில் சில சொத்துகள் பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலங்களாகும். அவற்றின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.100 கோடி, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்துக்கும், இந்த 68 சொத்துகள் பறிமுதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அபராதத் தொகை செலுத்தப்படாவிட்டால், அதற்கு ஈடாக ஜெயலலிதா, சசிகலா பெயரில் வங்கிகளில் உள்ள பணம் எடுத்துக் கொள்ளப்படும். அந்த பணமும் அபராத தொகையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாவிட்டால், ஜெயலலிதா, சசிகலாவின் நகைகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நகைகள் ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் விற்கப்பட வேண்டும் என்றும் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

எனவே ஜெயலலிதா பெயரில் உள்ள சில சொத்துகள் மட்டுமே மிஞ்சும். குறிப்பாக போயஸ் கார்டன் வீடு பறிமுதல் நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை.
போயஸ்கார்டன் வீடு உள்பட ஜெயலலிதா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு அவரது வாரிசுகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அதாவது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருவரும் அதற்கு உரிமை கோர முடியும். அவர்கள் சட்டப்படி உரிமை கோராவிட்டாலோ அல்லது அதில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அந்த சொத்துகளை மாநில அரசு பறி முதல் செய்ய முடியும். அந்த வகையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் தமிழக அரசால் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் சொத்துகளில் பெரும்பாலானவை அரசுடமை ஆகும் நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும் ஆலோசித்து வருகிறது. சட்ட நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. வாரிசு பிரச்சனையை தவிர்த்து போயஸ்கார்டன் வீட்டை அரசுடமையாக்க, அறிவிப்பு வெளியிட அரசு தயாராகி வருகிறது. எனவே போயஸ்கார்டன் வீடு பறிமுதல் செய்யப்படுவதற்கான உரிய அறிவிப்பை தமிழக அரசு எந்த நேரத்திலும் வெளியிட வாய்ப்புள்ளது.

மேலும் சில
  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது



  • கவிஞர் அப்துல் ரகுமான் காலமானார் : மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • அணி மாறும் மதுரை எம்எல்ஏ? கோயில் விழாவில் எடப்பாடி அணி எம்எல்ஏவுடன் ஆலோசனை



  • சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது : 3வது நாளாக தி.நகரில் போக்குவரத்து மாற்றம்



  • கருணாநிதியின் 94வது பிறந்தநாள் ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் பங்கேற்பு : சென்னையில் நாளை பிரமாண்ட விழா



  • 3 ஆண்டுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் பணி : 375 போலீசாருக்கு இடமாறுதல்



  • தாய் கண்ணெதிரே கன்டெய்னர் லாரி மோதி இளம்பெண் பரிதாப சாவு



  • அமைச்சர் தரப்புடன் மோதலை தொடர்ந்து பால் முகவர்கள் சங்க தலைவருக்கு ஆவின் உயர் அதிகாரிகள் மிரட்டல்: நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பியதால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]