இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டி இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை: ரோகித் சர்மா உறுதி: யுவராஜ் சிங் சந்தேகம்

5/30/2017 3:54:14 PM
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்: சோனியாவுடன் பாஜ குழு சந்திப்பு ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட கர்நாடக வாலிபர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு

லண்டன்: லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி  போட்டியில், இந்தியா-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது.  காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங்கும், சகோதரரின் திருமணம் காரணமாக ரோகித் சர்மாவும் அந்த போட்டியில் விளையாடவில்லை. ரோகித் சர்மா   தற்போது இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக மிடில்-ஆர்டரில் களமிறங்கி வந்த ரோகித் சர்மா, இன்றைய போட்டியில் ஷிகார் தவானுடன் இணைந்து  தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியதில் ஷிகார்  தவான்-ரோகித் சர்மா கூட்டணிக்கு முக்கிய பங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

 ரோகித் சர்மா இந்திய அணிக்காக கடைசியாக விளையாடியது கடந்த  ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான். அதன்பின் காயத்தால் அவதிப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்து, இந்திய அணிக்காக மீண்டும்  விளையாடவுள்ளார். ஆனால் யுவராஜ் சிங் விளையாடுவது இன்னமும் சந்தேகத்தில்தான் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி  போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து துறைகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மறுபக்கம் வங்கதேச அணி தனது முதல் பயிற்சி போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. அதில் இருந்து மீண்டு  வர வங்கதேசம் முயற்சிக்கும். இன்று மதியம் 3 மணிக்கு பர்மிங்ஹாமில் நடைபெறும் மற்றொரு பயிற்சி போட்டியில் நியூசிலாந்து-இலங்கை அணிகள்  பலப்பரீட்சை நடத்துகின்றன. அனைத்து அணிகளுக்கும் இதுவே கடைசி பயிற்சி போட்டியாகும். சாம்பியன்ஸ் டிராபிக்கு தங்களை முழுமையாக  தயார்படுத்தி கொள்ள இந்த போட்டிகளை அனைத்து அணிகளும் பயன்படுத்தி கொள்ள முயலும்.

மேலும் சில
  • கடைசி தடையை வெற்றிகரமாக கடந்து கோப்பையை இந்தியா தக்க வைக்கும்: ரோகித் சர்மா நம்பிக்கை



  • பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி



  • தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை



  • தென் ஆப்ரிக்காவுடன் இன்று ேமாதல் பாகிஸ்தான் எழுச்சி பெறும்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது நம்பிக்கை



  • எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து



  • நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]