இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபியை அச்சுறுத்தும் மழை: பாடம் கற்றுக்கொள்ளாத ஐசிசி

5/30/2017 3:53:32 PM
டெல்லியில் ஜூலை முதல் மீண்டும் போராட்டம் : 29 மாநில விவசாய சங்க தலைவர்கள் முடிவு தீ விபத்தில் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடம் சரிந்தது

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 1ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால்  இந்தியா-நியூசிலாந்து, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. லண்டனில் நேற்று  முன் தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு  எதிராக பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 10.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 57  ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. அதுதவிர இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையேயான ஒரு நாள் தொடரின்போதும் கூட  அவ்வப்போது மழை குறுக்கிட்டது.

 ஒரு பெரிய புயலுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான ஒரு  தொடரை நடத்த இந்த தருணத்தை ஐசிசி தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடர்களும் கூட  மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட, இந்தியா-இலங்கை  அணிகள் இணை சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் இதில் இருந்து ஐசிசி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றே கிரிக்கெட் விமர்சகர்கள்  கூறுகின்றனர்.

 நடப்பு தொடரில் போட்டிகள் நடைபெறும் லண்டன், பர்மிங்ஹாம், கார்டிப் ஆகிய 3 நகரங்களும் புயல்படர் வானிலை கொண்டவை என்பது  அனைவரும் அறிந்ததே. இதில், பர்மிங்ஹாம் நேற்று முழுவதும் மழையை கண்டது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில்  உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ‘ஹை-வோல்டேஜ்’ போட்டி வரும் ஜூன் 4ம் தேதி  பர்மிங்ஹாமில்தான் நடைபெறுவதாக உள்ளது. அடுத்த 2 வார காலத்தில், லண்டன் நகரம் 4 நாட்கள் 5-10 மில்லி மீட்டர் மழையை பெறும் வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது. இது 15-20 மில்லி மீட்டர் என உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இங்கிலாந்து-நியூசிலாந்து லீக் (ஜுன் 6),  முதல் அரையிறுதி (ஜுன் 14) என முக்கியமான போட்டிகள் நடைபெறும் கார்டிப் நகரிலும் மழைக்கான வானிலை நிலவுகிறது. டிக்கெட்டுகள் விற்று  தீர்ந்து விட்ட நிலையில், போட்டிகளில் மழை விளையாடி விடக்கூடாது என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.


மேலும் சில
  • கடைசி தடையை வெற்றிகரமாக கடந்து கோப்பையை இந்தியா தக்க வைக்கும்: ரோகித் சர்மா நம்பிக்கை



  • பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் சவால் நிறைந்ததாக இருக்கும்: இந்திய அணி கேப்டன் கோஹ்லி



  • தென் ஆப்ரிக்காவை வீழ்த்த பாகிஸ்தானுக்கு அப்ரிடி அறிவுரை



  • தென் ஆப்ரிக்காவுடன் இன்று ேமாதல் பாகிஸ்தான் எழுச்சி பெறும்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது நம்பிக்கை



  • எதிர்ப்பின்றி வீழ்ந்தது நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி ஆனாலும் முழு திருப்தி ஏற்படவில்லை: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து



  • நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]