பெயிண்டருக்கு சரமாரி அடி
5/30/2017 3:34:07 PM
ஆவடி: ஆவடியை அடுத்த பட்டாபிராம் அமுதூர்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகு (52). இவர் பெயிண்டர். இவரது மனைவி வசந்தா கடந்த 3 வருடத்துக்கு முன் தீக்குளித்து இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்றிரவு 10 மணி அளவில் லோகு தனது வீட்டின் முன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வந்த சிலர், லோகுவை சுற்றிவளைத்து கட்டையால் அடித்தனர். கற்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த லோகு கதறினார். அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக லோகுவை மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.