திருமணம் செய்துகொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
5/29/2017 2:47:45 PM
ஆவடி: ஆவடி ராமலிங்கபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (25). இவருக்கும் ஆவடி நந்தவன மேட்டூரை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பெண்ணுடன் பால்ராஜ் ஜாலியாக இருந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சியுள்ளார்.ஆனால் இதற்கு பால்ராஜ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. அத்துடன் சந்திப்பதையும் பேசுவதையும் தவிர்த்துவந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பெண், நேற்று ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ஷோபனா வழக்குப்பதிவு செய்து விசாரித்து, பால்ராஜை இன்று கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.