இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தக்க வைக்கும் : கேப்டன் கோஹ்லி நம்பிக்கை

5/26/2017 3:07:13 PM
வரலாறு காணாத தீபாவளி பட்டாசு புகை சென்னை திணறியது புதுவையில் தீபாவளியன்று பயங்கரம் நாய்சேகர் உட்பட 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி படுகொலை

லண்டன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி அளித்த பேட்டி: அணியில் உள்ள வீரர்கள் இம்முறை நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். அத்துடன் வீரர்களிடம் நல்ல முதிர்ச்சியும் காணப்படுகிறது. இதனால் சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது (2013 சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய இந்தியா, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நடப்பு தொடரில் களமிறங்குகிறது). கடந்த 3-4 ஆண்டுகளில் நிறைய அனுபவம் பெற்றுள்ளோம். உலக கோப்பை என்றால் நிறைய போட்டிகளில் விளையாடலாம்.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் போட்டிகளுக்கு (லீக்) பிறகு அரையிறுதி அல்லது வெளியேற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். இப்படி சவால் நிறைந்ததாக இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நான் மிகவும் விரும்புகிறேன். மத்திய வரிசை, பின் வரிசை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக டோனி அதிக சுமையை சுமந்து வந்தார்.

டோனியுடன் இணைந்து போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ய போதிய வீரர்கள் இல்லாததால், தனது முழு திறமையை டோனியால் வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது கேதர் ஜாதவும், ஹர்திக் பாண்டியாவும் டோனியின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து அதனை சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இனி எப்படி செயல்பட போகிறோம் என்பதில்தான் அனைத்தும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், வரும் ஜூன் 4ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]