இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இங்கிலாந்தில் இன்று காலை குண்டுவெடிப்பு: 19 பேர் பரிதாப பலி 50 பேர் படுகாயம்: தீவிரவாதிகள் தாக்குதல்

5/23/2017 3:28:30 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

மான்செஸ்டர்: இங்கிலாந்து மான்செஸ்டரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, குண்டுவெடித்து 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று இரவு பிரபல பாப் பாடகி அரியனா கிராண்டேயின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசைக்கச்சேரியில் சுமார் 21 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கூடியிருந்த இந்நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. ஆட்டம், பாட்டம் என இளைஞர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 3.05 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்து சிதறின.  

ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இக்கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இசைநிகழ்ச்சி நடைபெற்ற பகுதியின் கதவுகள் திறக்கப்பட்டன. இதையடுத்து அங்கிருந்தவர்கள் வெளியேறினர். தகவலறிந்து போலீசார், பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்சுகள் அதிகளவில் வரவழைக்கப்பட்டன. இந்த குண்டுவெடிப்பில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இசைக்கச்சேரி அரங்கத்தில் இருந்து தொலைதூரத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், பாடகி அரியனா கிராண்டேவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மான்செஸ்டர் நகரில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் நகருக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
 தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் எந்தவொரு இயக்கமும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இத்தாக்குதலை பல்வேறு நாட்டு தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘மான்செஸ்டரில் நடந்த தாக்குதல் வேதனையளிக்கிறது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என கூறியுள்ளார். இசை கச்சேரியில் குண்டுவெடிப்பு சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]