இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

உளவாளி என்ற சந்தேகத்தில் பாகிஸ்தானில் கைதான இந்தியரின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு: சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

5/19/2017 3:05:27 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

ஹேக்: பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி் குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று இந்திய நேரப்படி சரியாக 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற இந்தியாவின் முறையீட்டில் நியாயம் இருக்கிறது. எனவே மறு உத்தரவு வரும்வரை ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை பாகிஸ்தான் நிறுத்திவைக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை பாகிஸ்தான் ஏற்று நடக்க வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தரப்பில் தூதரகம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டது ஏற்புடையதல்ல. வியன்னா ஒப்பந்தத்தின்படி குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளித்திருக்க வேண்டும். ஜாதவ் கைது செய்யப்பட்ட முறையில் சந்தேகம் இருக்கிறது.  இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது” என உத்தரவிட்டனர்.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]