இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இன்று குவாலிபயர்-2 போட்டி: பைனலில் புனேவுடன் மோதப்போவது யார்?

5/19/2017 2:59:46 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

பெங்களூரு: பெங்களூரு எம்.சின்னச்சாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும், ஐபிஎல் டி20 தொடரின் குவாலிபயர்-2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  10 வெற்றிகளுடன் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த மும்பை, குவாலிபயர்-1 போட்டியில் புனேவிடம் தோல்வி கண்டது. முதல் 11 போட்டிகளில் 9ல் வென்ற மும்பை தற்போது தடுமாறுகிறது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருப்பது அதற்கு சான்று. ஆனால் 2013 ஐபிஎல் குவாலிபயர்-1ல் தோல்வியடைந்து, பின்னர் குவாலிபயர்-2ல் வென்று பைனலுக்கு முன்னேறிதான் மும்பை கோப்பையை வென்றது.

மறுபக்கம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்பே கொல்கத்தாவுக்கு இருந்தது. ஆனால் லீக் சுற்று கடைசி போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்ததால், 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. எனினும் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி குவாலிபயர்-2க்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது.  மும்பை கேப்டன் ரோகித் சர்மா தடுமாறி வருகிறார். இன்றைய போட்டியில் பெரிய ஸ்கோர் அடித்து அவர் ‘பார்முக்கு’ திரும்புவது அவசியம். மறுபக்கம் 6 ஓவர்களில் 48 ரன்களை துரத்திய எலிமினேட்டர் போட்டியில், 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விட்ட நிலையில், கொல்கத்தா கேப்டன் கம்பீர் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்து, அணிக்கு வெற்றி தேடி தந்தார்.

ராபின் உத்தப்பா, யூசுப் பதான் உள்ளிட்ட இதர பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோரும் அதிரடியாக விளையாடுவது கொல்கத்தாவுக்கு அவசியமானது. பார்த்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, பொல்லார்டு உள்ளிட்டோரை பேட்டிங்கில் மும்பை பெரிதும் நம்பியுள்ளது. பந்து வீச்சை பொறுத்தவரை மும்பை அணியின் மெக்கிளனகன், பும்ரா, கொல்கத்தாவின் நாதன் கோல்டர் நைல் உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி, வரும் 21ம் தேதி இரவு நடைபெறும் பைனலில், புனேவுக்கு எதிராக விளையாடும். நடப்பு சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் மும்பையே வென்றுள்ளது. அதற்கு பதிலடி ெகாடுக்க கொல்கத்தாவும், ஆதிக்கத்தை தொடர மும்பையும் முயலும். பைனலுக்கு முன்னேற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான போட்டி காத்திருக்கிறது.

* இந்தியாவில் உள்ள மைதானங்களில் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்றால் அது பெங்களூரு எம்.சின்னச்சாமி மைதானம்தான். ஆனால் சமீப காலமாக பந்து வீச்சுக்கு ஒத்துழைத்து வரும் இம்மைதானத்தில் இதுவரை 9 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 7ல் வென்றுள்ளது.
* இதர அணிகளுடன் ஒப்பிடுகையில் கொல்கத்தாவுக்கு எதிராகதான் ரோகித் சர்மா அதிக ரன்களை எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக அவர் இதுவரை 684 ரன்களை (சராசரி 48.86) குவித்துள்ளார்.
* பவர் பிளே ஓவர்களில் (முதல் 6 ஓவர்கள்) 9.69 என்ற சிறந்த ‘ஸ்கோரிங் ரேட்’ கொல்கத்தா வசமும், டெத் ஓவர்களில் (இறுதி கட்ட ஓவர்கள்) 10.71 என்ற சிறந்த ‘ஸ்கோரிங் ரேட்’ மும்பை வசமும் உள்ளன.
* பவர் பிளே ஓவர்களில் 7.67 என்ற சிறந்த ‘எகானமி ரேட்’ மும்பையிடம் உள்ளது.  
* ரோகித் சர்மா, கம்பீர் இருவரும் முதலில் பீல்டிங் செய்யும் கேப்டன்களாகவே உள்ளனர். நடப்பு சீசனில் இதுவரை டாஸ் வென்ற 9 போட்டிகளில் 8ல் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். கம்பீரோ டாஸ் வென்ற 9 போட்டிகளிலும் பீல்டிங்கைதான் தேர்ந்து எடுத்துள்ளார்.  
* இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில், மும்பை 15, கொல்கத்தா 5 போட்டிகளில் வென்றுள்ளன.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]