ரஜினியுடன் 4வது நாளாக ரசிகர்கள் சந்திப்பு
5/18/2017 3:53:52 PM
சென்னை: ரஜினியுடன் இன்று 4வது நாளாக ரசிகர்கள் சந்திப்பு நடந்தது. 4 மாவட்டங்களை சேர்ந்த 650 பேர் புகைப்படம் எடுத்தனர். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் அனைவரும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 9 மணிக்கு வெள்னை குர்த்தா, ஜிப்பா அணிந்து வந்த ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர். இதையடுத்து புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. இன்று புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 650 ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்தனர். இன்று காலையிலேயே ராகவேந்திரா மண்டபம் முன்பு ரசிகர்கள் அதிகம்பேர் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து ரஜினி கை அசைத்தார். நாளை 5வது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.