இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபிக்கு டோனி தேர்வு இந்தியாவின் சாமர்த்தியமான முடிவு: மைக்கேல் கிளார்க் பாராட்டு

5/18/2017 3:37:25 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடந்த குவாலிபயர்-1 போட்டியில் மும்பையை வீழ்த்தி புனே பைனலுக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த புனே 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன் மட்டுமே எடுத்திருந்தது. டோனி 17 பந்துகளில் 14 ரன்னுடன் களத்தில் இருந்தார். மறுமுனையில் மனோஜ் திவாரி இருந்தார். கடைசி 2 ஓவர்களில் அவர்கள் 41 ரன் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் புனே 162 ரன்களை குவித்தது. இறுதியில் டோனி ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் தான் ஒரு சிறந்த ‘பினிஷர்’ என்பதை மீண்டும் நிரூபித்தார்.

பின்னர் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.  இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், ‘டோனியின் இன்னிங்ஸ்தான் போட்டியை மாற்றியது. விக்கெட் கீப்பிங்தான் டோனியின் முதன்மையான பணி. அதில் அவர் மிக சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் பணி அவருக்கு இரண்டாவதுதான். டோனி திறமையானவர் என்பதை அறிந்திருப்பதால், அவர் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என விரும்புகிறோம். செவ்வாய்க்கிழமை இரவு (நேற்று முன் தினம்) அவர் அதை செய்து விட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு (ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது) டோனியை தேர்வு செய்தது இந்தியாவின் சாமர்த்தியமான முடிவு.

அந்த தொடரில் டோனி சிறப்பாக விளையாடுவார். அதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. சாம்பியன்ஸ் டிராபியில் பேட்டிங் ஆர்டரில் டோனியை விராட் கோஹ்லி எந்த வரிசையில் களமிறக்குவார் என்பதை காண ஆவலாக உள்ளேன். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமட்ஸை போல், டி20 போட்டிகளில் 4வது வீரராகவும், ஒரு நாள் போட்டிகளில் 5வது வீரராகவும் டோனியை களமிறக்க வேண்டும். இந்தியா கோப்பையை வென்றால், அதில் டோனியின் அனுபவம், திறன்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்’ என்றார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]