இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அனைத்து இந்திய வீரர்களும் மேட்ச் வின்னர்களே... சாம்பியன்ஸ் டிராபியில் அசத்துவார்கள் என கெய்ல் உறுதி

5/16/2017 2:49:27 PM
இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு: டெல்லி வட்டாரங்கள் தகவல் பாஜவின் சொத்து மதிப்பு ரூ.893 கோடி : 11 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய வீரர்களான விராட் கோஹ்லி (308 ரன்கள்), கேதர் ஜாதவ் (267 ரன்கள்), யுவராஜ் சிங் (243 ரன்கள்) எடுத்துள்ளனர். ஆனால் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் ஆட்டம் அமையவில்லை. வரும் ஜுன் 1ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்த மூவர் கூட்டணியை இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் சொல்லி கொள்ளும்படி அவர்களுக்கு சிறப்பாக அமையவில்லை.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என வெஸ்ட் இண்டீஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒரு நாள் கிரிக்கெட்டில் கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டு நன்றாக ‘செட்’ ஆகி விளையாட முடியும். ஒரு நாள் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில், டி20 கிரிக்கெட் மிக வேகமானது.

இந்திய ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஒரு போட்டியில் நன்றாக ‘செட்’ ஆகி விட்டால், எவ்வளவு அபாயகரமானவர்களாக உருவெடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய வீரர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள்தான். எனவே தற்போதைய ஐபிஎல் ‘பார்மை’ மறந்து விடுங்கள். ஒவ்வொரு வீரரும் தன் அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்று தர வேண்டும் என ஆர்வமாக உள்ளனர். ஆனால் இங்கிலாந்தில் ஒரே நாளில் 5 வித்தியாசமான வானிலை நிலைமை சமாளிக்க வேண்டியதிருப்பதுதான் சவாலானது’ என்றார்.

மேலும் சில
  • குல்தீப் யாதவ் கும்ப்ளேவின் தயாரிப்பு: சுரேஷ் ரெய்னா பேட்டி



  • ஐதராபாத்தில் இன்று கடைசி டி.20 போட்டி தொடரை கைப்பற்றுமா இந்தியா?: புதிய உற்சாகத்தில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா



  • கல் வீச்சு வருத்தம் அளித்தாலும் இந்திய ரசிகர்கள் சிறப்பானவர்கள்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா பேட்டி



  • கானாவுடன் இன்று மோதல் வெற்றிக்காக இறக்கவும் வீரர்கள் தயாராக உள்ளனர்: இந்திய அணி பயிற்சியாளர் பேட்டி



  • மக்காவுக்கு எதிராக 4-1 என அபார வெற்றி ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 4வது முறையாக தகுதி பெற்றது இந்தியா



  • உலக கோப்ைபக்கு அர்ஜென்டினா தகுதி



  • யு-17 உலக கோப்பையில் விளையாடி வரும் கால்பந்து வீரரின் தந்தை ஜனாதிபதி பதவிக்கு போட்டி



  • 2வது டி20 போட்டியில் வென்று ஓட்டலுக்கு திரும்புகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயணித்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்



  • 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி கேமரா முன் அடிக்கடி தோன்ற சிறப்பாக விளையாடினேன்!: இந்தியாவை கலங்கடித்த பெஹரன்டார்ப் பேட்டி



  • வாய்ப்புகள் என் வீட்டு கதவை தட்டும்: அஸ்வின் நம்பிக்கை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]