இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சோமாலியாவில் தீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டு கொன்ற பாதுகாப்பு படையினர்

5/5/2025 3:26:06 PM
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் 1 லட்சம் டாக்டர்கள் ஸ்டிரைக் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜர்

மொகாதிசு: சோமாலியாவில் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பர்மாஜோ வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து இவரது புதிய அமைச்சரவை மார்ச் மாதம் பொறுப்பேற்றது. இவரது புதிய ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக மிகவும் குறைந்த வயதுடைய அப்துல்லா ஷேக் (31) பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் நேற்று தலைநகர் மொகாதிசுவில் அதிபர் மாளிகை அருகே அப்துல்லா ஷேக் காரில் வந்து கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் அவரை சுட்டு கொன்றனர்.

சோமாலியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த சூழலில் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவு அமைப்பான அல் சபாப் இயக்கத்தினர் அங்கு ஆயுத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அதிபர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று அதிபர் மாளிகை நோக்கி அமைச்சர் அப்துல்லா ஷேக் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சோதனை சாவடி அருகே வந்த போது, தீவிரவாதிகள் வந்த கார் என நினைத்து பாதுகாப்பு படையினர் காரின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அமைச்சர் அப்துல்லா ஷேக் பலியானார். தற்போது இந்த விவகாரம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.  சோமாலியாவில் அப்துல்லா ஷேக் இளைஞர்கள் இடையே மிகுந்த ஆதரவை பெற்றிருந்தார். அவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடையாது : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி, இந்தியா வரவேற்பு



  • பாகிஸ்தான் சிறைகளிலிருந்து 291 இந்திய மீனவர்கள் விடுதலை



  • உளவு பார்த்ததாக கைதான இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷனை உடனடியாக தூக்கில் போட மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு



  • அமெரிக்காவில் ரயில் விபத்து 3 பேர் பலி, 50 பேர் காயம்



  • ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்



  • இலங்கையில் தமிழ் தேசிய கூட்டணிக்கு எதிராக புதிய அணி உதயம்



  • ஜெர்மனியில் பயங்கரம்: ரயில்கள் நேருக்கு நேர் மோதல்



  • இங்கிலாந்து பிரதமரை கொல்ல முயற்சி: போலீசாரின் சாதுர்யத்தால் சதி முறியடிப்பு



  • ஹபீஸ்-முஷாரப் தேர்தல் கூட்டணி: பாக். அரசியலில் புதிய திருப்பம்



  • வங்கியில் வாங்கிய கடனை ரேசில் செலவிட்ட மல்லையா: லண்டன் கோர்ட்டில் இந்திய வக்கீல் வாதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]