இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தி புனே 6வது வெற்றி; பென் ஸ்டோக்ஸால் பெருமை கொள்கிறேன் : கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

5/2/2025 5:35:50 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

புனே: ஐபிஎல் டி20 தொடரில், புனேவில் நேற்று இரவு நடந்த 39வது லீக் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் 19.5 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரண்டன் மெக்கல்லம் 45 ரன்கள் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். இம்ரான் தாஹிர், ஜெயதேவ் உனத்காட் தலா 3, ஷர்துல் தாகூர், கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த புனே 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் தலா 4, மனோஜ் திவாரி 0, திரிபாதி 7 ரன்களில் ஆட்டமிழந்ததால், 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து புனே திணறியது. எனினும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் (63 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசியதால் வெற்றியை வசப்படுத்தியது.

அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய டோனி 26, கிறிஸ்டியன் 17 ரன்கள் எடுத்தனர். பாசில் தம்பி, பிரதீப் சங்வான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இரு அணிகளுக்கும் இது 10வது போட்டியாகும். புனே 6வது வெற்றியையும், குஜராத் 7வது தோல்வியையும் சந்தித்தன. வெற்றி குறித்து புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. எனினும் எங்கள் கூடாரத்தில் சில பீரங்கிகள் உள்ளன. பென் ஸ்டோக்சும், டோனியும் வெற்றியை வசப்படுத்தி விட்டனர் (5வது விக்கெட்டிற்கு டோனிஸ்டோக்ஸ் 76 ரன் சேர்த்தனர்). இந்த மைதானத்தில் சிக்சர் விளாசுவது எளிது. அதை ஸ்டோக்ஸ் அழகாக பயன்படுத்தி கொண்டார்.

அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரால் பெருமை கொள்கிறேன். குஜராத்தை 161 ரன்களுக்கு சுருட்டிய பவுலர்களுக்கு பாராட்டுக்கள்’ என்றார்.  குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘2530 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். பாசில் தம்பி, ஜேம்ஸ் பால்க்னர் பந்து வீசுகையில் பனி அதிகளவில் இருந்தது. அத்துடன் எங்களிடம் தரமான ஸ்பின் அட்டாக்கும் இல்லை.  ஸ்டோக்சின் ஆட்டம்தான் திருப்புமுனையாக அமைந்து விட்டது. அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் எங்களுக்கு 4 போட்டிகள் உள்ளது. அவை எங்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்’ என்றார்.

மேலும் சில
  • ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு விவகாரம் : பாக்.குடன் விளையாட்டு உறவை முறிக்க இந்தியா அதிரடி முடிவு



  • இதெல்லாம் எனக்கு புதுசு... ஆட்டநாயகன் விருதுபெற்ற திரிபாதி



  • டேவிட் வார்னரை போல் திரிபாதி வெற்றியை பறித்து சென்று விட்டார் கொல்கத்தா கேப்டன் கம்பீர் புலம்பல்



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் : பாகிஸ்தான் அணி முன்னிலை



  • சாம்பியன்ஸ் டிராபி அணியில் தவான், புவனேஸ்வருக்கு வாய்ப்பு



  • பேட்ஸ்மேன் நகரும் போது அதற்கு தகுந்தாற்போல் பந்து வீசினேன் : ஆட்ட நாயகன் முகமது ஷமி பேட்டி



  • பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் 312 ரன்னில் ஆல் அவுட்



  • அர்ஜூனா, கேல் ரத்னா விருதுக்கு புஜாரா, சர்தார் சிங் பெயர் பரிந்துரை



  • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்பது குறித்து தீர்மானிக்க சிறப்பு பொது குழு கூட்டம் கூடுகிறது



  • விளையாட்டு துளிகள்...



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]