இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

4/30/2017 3:14:21 PM
ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் : சரத் யாதவ் நம்பிக்கை உத்தரகண்டில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 2வது கட்டமாக 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல்  தவணை கடந்த 2ம் தேதி அன்று கொடுக்கப்பட்டது. 2வது தவணையாக இன்று சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். அதன்படி, தமிழகத்தில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும்  செய்யப்பட்டிருந்தன.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதலே குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்தனர். மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்பதால் பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளின் வசதிக்காக  முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார்  2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள். ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

மேலும் சில
  • வேதகிரீஸ்வரர் கோயில் 63 நாயன்மார்கள் கிரிவலம்: திருக்கழுக்குன்றத்தில் கோலாகலம்



  • விழுப்புரம் பைபாஸ் திடலில் மே 5ல் வணிகர் தின மாநாடு 10 லட்சம் பேர் பங்கேற்பு



  • மாம்பாக்கத்தில் அடிக்கடி மின்வெட்டு



  • வெயிலில் சுருண்டு விழுந்து கட்டிட தொழிலாளி சாவு



  • கூழமந்தல் கிராமத்தில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்



  • அனந்தேரி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்



  • திருவொற்றியூரில் 120 பேர் ரத்ததானம்



  • 1570 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன் என்று கூறி அதிமுக அரசின் அழுகிப்போன நிர்வாகத்தை பகட்டான பேச்சு மூலம் மறைக்க முடியாது: மு.க.ஸ்டாலின்



  • பைக் மீது கார் மோதியது ஆயுதப்படை எஸ்ஐ பரிதாப சாவு



  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது



Facebook

Twitter

Anushka removes rumorous assistant
வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]