இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 17வது நாளாக போராட்டம்

4/28/2017 3:00:17 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராடி வரும் மக்கள், மண்ணை தாரை வார்க்கமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 17வது நாளாக போராட்டம் நடக்கிறது. நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளே இந்த குழந்தைகளின் கதறல் கேட்கலையா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. இதுகுறித்து பெண்கள் கூறுகையில், நாங்கள் இன்றுடன் 17வது நாட்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறோம்.  எங்கள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக்கூடாது என்று நாங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையான நூதன போராட்டத்தின் மூலம் தெரிவித்து வருகிறோம்.

 ஆனால், மத்திய, மாநில அரசுகள் நாங்கள் போராடுவதை வேடிக்கை பார்க்கிறதே தவிர, இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை. நாங்கள் இந்த திட்டம் வேண்டாம் என்று பலமுறை கூறியும், எங்களுடைய விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கக்கூடிய இந்த திட்டத்தை ஏன் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் நேற்று திட்டத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நாங்கள் எங்களுடைய மண்ணில் விவசாயம் செய்து வாழ்வோமே தவிர, மற்ற யாருக்கும் எங்கள் மண்ணை தாரைவார்க்க மாட்டோம் என்றனர்.

மேலும் சில
  • கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள்



  • ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்



  • செங்கல்பட்டு அருகே பூச்சி மருந்து சாப்பிட்ட 3 சிறுவர்கள் சீரியஸ்



  • கரூரில் அதிமுக சசி அணியினர் போட்டி போட்டு உண்ணாவிரதம் : ஒரே இடத்தை கேட்பதால் சிக்கல்



  • தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் 34வது வணிகர் தின மாநாடு: சென்னையில் நாளை நடக்கிறது



  • காஞ்சி.யில் வேலைவாய்ப்பு முகாம்



  • விழுப்புரத்தில் நாளை வணிக வளர்ச்சி மாநாடு: வணிகர்கள் குடும்பத்துடன் திரளவேண்டும்



  • திருவள்ளூரில் போதை பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி



  • பொதுமக்கள் எதிர்ப்பை மீறி உத்திரமேரூரில் 2 டாஸ்மாக் திறப்பு



  • நீட் தேர்வு விலக்கு கோரி கருத்தரங்கம்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக தீர்மானம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]