இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தண்ணீர் தொட்டியில் இறங்கிய 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி

4/28/2017 2:59:21 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் வளையல்கார தெருவைச் சேர்ந்தவர் குமார் (40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் மணிலா பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக திட்டம் தீட்டியுள்ளார். தோட்டத்திற்குள் வரும் காட்டுப்பன்றிகள் முதலில் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பது வழக்கம். இதனால் குமார் தனியாக மின்வேலி அமைக்காமல் தண்ணீர் தொட்டியில் மட்டும் மின்கம்பியை போட்டு இணைப்பு கொடுத்துவிட்டுச்சென்றுள்ளார்.

இந்நிலையில் பக்கத்து கிராமமான கண்டம்பாக்கம் மேற்கு தெருவைச் சேர்ந்த வேலாயுதம் (68), சின்னத்தெருவை சேர்ந்த மகாதேவன் (46) ஆகிய இருவரும் நேற்றிரவு குமாரின் நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றுள்ளனர். மின்கம்பியை போட்டுள்ளது தெரியாததால் அவர்கள் இருவரும் தண்ணீரில் காலை வைத்ததும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான 2 பேரின் உடல்களைப்பார்த்து அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

மேலும் சில
  • கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள்



  • ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்



  • செங்கல்பட்டு அருகே பூச்சி மருந்து சாப்பிட்ட 3 சிறுவர்கள் சீரியஸ்



  • கரூரில் அதிமுக சசி அணியினர் போட்டி போட்டு உண்ணாவிரதம் : ஒரே இடத்தை கேட்பதால் சிக்கல்



  • தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் 34வது வணிகர் தின மாநாடு: சென்னையில் நாளை நடக்கிறது



  • காஞ்சி.யில் வேலைவாய்ப்பு முகாம்



  • விழுப்புரத்தில் நாளை வணிக வளர்ச்சி மாநாடு: வணிகர்கள் குடும்பத்துடன் திரளவேண்டும்



  • திருவள்ளூரில் போதை பொருட்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி



  • பொதுமக்கள் எதிர்ப்பை மீறி உத்திரமேரூரில் 2 டாஸ்மாக் திறப்பு



  • நீட் தேர்வு விலக்கு கோரி கருத்தரங்கம்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக தீர்மானம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]