இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

எவ்வளவு கடினமான இலக்கையும் எங்களால் ‘சேஸ்’ செய்ய முடியும் கொல்கத்தா கேப்டன் கம்பீர் நம்பிக்கை

4/27/2017 2:51:43 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

புனே: ஐபிஎல் டி20 தொடரில், புனேவில் நேற்று இரவு நடந்த, 30வது லீக் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த புனே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 51 (37 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ரஹானே 46 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 2, உமேஷ் யாதவ், பியூஸ் சாவ்லா, சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் பேட் செய்த கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா 87 (47 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்), கம்பீர் 62 ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜெயதேவ் உனத்காட், டேனியல் கிறிஸ்டியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உத்தப்பா ஆட்ட நாயகன் விருது வென்றார். இரு அணிகளுக்கும் இது 8வது போட்டியாகும். கொல்கத்தா 6வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. புனே 4வது தோல்வியை சந்தித்தது.

வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், ‘நாங்கள் ‘சேஸ்’ செய்வதில் வலுவான அணியாக உள்ளோம். எங்களால் எந்த இலக்கையும் ‘சேஸ்’ செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அணியின் வெற்றியில் தொடர்ந்து எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி. எங்கள் அணியின் அனைத்து ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்து வீசினர். எங்களுக்கான போட்டி அட்டவணை ‘பிஸியாக’ உள்ளது. நாளை மாலை 4 மணிக்கு (28ம் தேதி) டெல்லியுடன் மோதவுள்ளோம். இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நைல் விளையாட வேண்டும் (புனேவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது) என விரும்புகிறோம்’ என்றார்.

புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ‘உத்தப்பா, கம்பீர் அழகாக பேட்டிங் செய்தனர். சில கேட்ச்சுகளை தவற விட்டு விட்டோம். அவை விலை மதிப்பில்லாதவை என்பது நிரூபணமாகி விட்டது. தொடர்ச்சியாக இதே தவறை செய்கிறோம். எங்களின் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. காயம் காரணமாக இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது இழப்பு’ என்றார்.

* குல்தீப் யாதவ் வீசிய 18வது ஓவரில் டோனி (23 ரன்), மனோஜ் திவாரி (1 ரன்) ஆகியோர் விக்கெட் கீப்பர் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டனர். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 2 பேட்ஸ்மேன்களை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்க செய்த 2வது பவுலர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார். முன்னதாக இதனை கடந்த 2009ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அமித் மிஸ்ரா செய்துள்ளார்.

*  புனே அணியின் முதல் விக்கெட்டிற்கு ரஹானே-திரிபாதி ஜோடி 65 ரன் சேர்த்தது. தங்களின் சொந்த மைதானமான எம்சிஏ மைதானத்தில் இதுவரை விளையாடியுள்ள 8 இன்னிங்சுகளில் இதுதான் புனே அணி முதல் விக்கெட்டிற்கு எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

மேலும் சில
  • ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு விவகாரம் : பாக்.குடன் விளையாட்டு உறவை முறிக்க இந்தியா அதிரடி முடிவு



  • இதெல்லாம் எனக்கு புதுசு... ஆட்டநாயகன் விருதுபெற்ற திரிபாதி



  • டேவிட் வார்னரை போல் திரிபாதி வெற்றியை பறித்து சென்று விட்டார் கொல்கத்தா கேப்டன் கம்பீர் புலம்பல்



  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் : பாகிஸ்தான் அணி முன்னிலை



  • சாம்பியன்ஸ் டிராபி அணியில் தவான், புவனேஸ்வருக்கு வாய்ப்பு



  • பேட்ஸ்மேன் நகரும் போது அதற்கு தகுந்தாற்போல் பந்து வீசினேன் : ஆட்ட நாயகன் முகமது ஷமி பேட்டி



  • பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸ் 312 ரன்னில் ஆல் அவுட்



  • அர்ஜூனா, கேல் ரத்னா விருதுக்கு புஜாரா, சர்தார் சிங் பெயர் பரிந்துரை



  • குஜராத்தை வீழ்த்தி புனே 6வது வெற்றி; பென் ஸ்டோக்ஸால் பெருமை கொள்கிறேன் : கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு



  • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்பது குறித்து தீர்மானிக்க சிறப்பு பொது குழு கூட்டம் கூடுகிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]