இலங்கைக்கு கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல்
4/19/2017 2:58:49 PM
கீழக்கரை- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அருகில் உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருப்பதாக கடலோர காவல் படை எஸ்பி சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் உளவு பிரிவு ஏட்டு ஜெயகோபி, கீழக்கரை தலைமை காவலர் கண்ணன் உள்ளிட்டோர் சின்ன ஏர்வாடி கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது 100 கிலோ இருப்பது தெரியவந்தது. காரில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த கலீல்அகமது (47) மற்றும் அஜ்மல்கான் (38), கீழதில்லையேந்தல் அப்துற்ரஹ்மான் என்ற அருண் பிரசாத் (27), கமுதி முனியசாமி (37) ஆகியோரை கடலோர காவல்படையினர் கைது கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.