இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது: மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி

4/12/2025 5:48:50 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

புதுடெல்லி- விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என மத்திய அரசு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. இ்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக உயிரை விட மேலான மானத்தை கூட விட்டு விட்டு பிரதமர் அலுவலகம் முன்பாக நிர்வாண போராட்டம் வரை நடத்தி  வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தங்களது பயிர் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி, விவசாய பிரச்னைகளில் மத்திய அரசின் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது அதை தொடர்ந்து நபார்டு வங்கியும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது என கைவிரித்து விட்டது. இந்த சூழலில் பயிர்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் வசம் இல்லை என மத்திய அரசு நேற்று பார்லி.யில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இருந்த போதிலும் விவசாயிகளின் கடன் சுமைகளை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுகுறித்து உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மத்திய அரசின் இந்த பதில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது



  • உத்தர பிரதேசத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை



  • மம்தாவுக்கு மிரட்டல் விடுத்த பாஜ தலைவர் தலைக்கு ரூ.22 லட்சம் பரிசு: கொல்கத்தா இமாம் அறிவிப்பு



  • வருகிற 30ம் தேதிக்குள் வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்: வங்கியில் ஆதார் எண் இணைக்க வேண்டும்



  • பட்ஜெட் கூட்ட தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றம்



  • வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: முதல்வர் அமரிந்தர் சிங் பேச்சு



  • பெட்ரோல் விலை தினசரி மாற்றம் நடைமுறைக்கு ஒத்துவராது: புதுவை முதல்வர் பேட்டி



  • குட்டிக்கரணம் அடித்து விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் 31வது நாளாக நீடிப்பு



  • விஐபிக்கள் காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த கட்டுப்பாடு: மூத்த அமைச்சர்களுடன் ஆலோசிக்க பிரதமர் முடிவு



  • கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பின் ரூ.5400 கோடி கருப்பு பணம் சிக்கியது: ஜெட்லி தகவல்



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]