இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான கீதாலட்சுமியிடம் வருமானவரித்துறை விசாரணை: சரத்குமார், ராதிகாவும் ஆஜர்

4/12/2025 5:35:05 PM
வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட 8 மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பாஜ முன்னிலை: ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது

சென்னை- அமைச்சர் விஜய பாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் இன்று வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமாரிடமும் வருமான வரித்துறையினர் 2வது நாளாக விசாரணை நடத்துகின்றனர். ராதிகாவும் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வீடு, வீடாக கடந்த செவ்வாய்கிழமை இரவு பணம் விநியோகத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்குச் சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 7 அமைச்சர்கள் ரூ.89 கோடி பண விநியோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின.

அதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜராகினர். அப்போது விஜயபாஸ்கர், ராஜேந்திரனிடம் 5 மணி நேரமும், சரத்குமாரிடம் 8 மணி நேரமும் விசாரணை நடந்தது. இந்த விசாரணையைத் தொடர்ந்து ராதிகாவின் ராடன் டிவி அலுவலகத்தில் நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நடிகர் சரத்குமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார். அப்போது நடிகை ராதிகாவும் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு திடீரென்று சரத்குமார் ஆதரவு தெரிவித்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சரத்குமாரை தினகரன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது பெரிய அளவில் பணம் கை மாறியிருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான் சோதனை நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து இருவரிடமும் இன்று விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீதாலட்சுமியிடம் விசாரணை :அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்தவர் கீதாலட்சுமி. இவர் தற்போது எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ளார். இவரது சாலிகிராமம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள் நடத்தப்பட்டன. சோதனைக்குப் பின் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை கீதாலட்சுமிக்கு நோட்டீஸ் அளித்தது. ஆனால் அவர் ஆஜராகாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததோடு அவருக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தனர். இதனால் இன்று காலை 11 மணிக்கு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கீதாலட்சுமி வந்தார். நேராக அதிகாரிகளின் அறைக்குச் சென்றார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • மாபா.பாண்டியராஜன் முன்ஜாமீன் மனுதள்ளி வைப்பு



  • வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை



  • விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாதது அவமானம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு



  • விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க திமுக சார்பில் 16ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • ஆர்.கே.நகர் தேர்தல் தகராறு வழக்கு ஓபிஎஸ் மகன், தம்பியை கைது செய்ய தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • அந்நிய செலாவணி மோசடி வழக்கு டிடிவி.தினகரன் 2 நாள் நேரில் ஆஜராக வேண்டும்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு



  • எடப்பாடி அரசுக்கு எதிராக சசிகலா அணி எம்எல்ஏ உண்ணாவிரதம்



  • ஊத்தங்கரை அருகே கார் விபத்து: சென்னை சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் பரிதாப பலி



  • எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் ஆயிரம் விளக்கில் நாளை மாபெரும் பொதுக்கூட்டம்: ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் பங்கேற்பு



  • கவர்னர், முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]