சட்டீஸ்கர் கிராமங்களில் மது விலக்கு
4/12/2025 2:49:45 PM
ராய்ப்பூர்- சட்டீஸ்கரில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களில் மது விலக்கு அமல்படுத்த ராமன் சிங் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விழா ஒன்றில் முதல்வர் ராமன் சிங் பேசுகையில், சட்டீஸ்கர் மாநிலம் விரைவில் முழுமையான மதுவிலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மது விற்பனையில் புரோக்கர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது. மது விலக்கின் முதல் படியாக 3 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமானோர் வசிக்கும் கிராமங்களில் மது விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். சட்டீஸ்கரில் ஏப்ரல் 1 முதல் மாநில அரசே மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.