ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் இயங்காது
4/12/2025 2:49:11 PM
புதுடெல்ல- கமிஷன் தொகையை உயர்த்தாவிட்டால் ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என டீலர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கி வருகிற கமிஷனை கூட்டித்தர வேண்டும் என்று பெட்ரோலிய டீலர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவி ஷிண்டே கூறியதாவது, அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரை செய்துள்ள 1000 லிட்டர் பெட்ரோல் விற்றால் ரூ.3 ஆயிரத்து 333-ம், 1000 லிட்டர் டீசல் விற்றால் ரூ.2 ஆயிரத்து 126-ம் கமிஷன் வழங்க வேண்டும். இதை தருவதாக பெட்ரோல் நிறுவனங்கள் உறுதி அளித்தன. ஆனால் இதுவரை தரவில்லை. எனவே வருகிற மே 10ம் தேதி பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை. மே 14 முதல் ஞாயிறுகளில் பெட்ரோல் பங்குகளை இயக்க மாட்டோம். மே 15ம் தேதி முதல் பகலில் மட்டுமே பெட்ரோல் பங்குகளை இயங்கச் செய்வோம் என்றார்.