திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி
4/4/2025 3:35:59 PM
திருவள்ளூர்- திருவள்ளூர் மாவட்ட காவல்நிலையங்களில் எஸ்ஐக்கள் 29 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போலீஸ் எஸ்ஐக்கள் தேர்வு நடந்து, வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள போலீஸ் அகாடமியில் அடிப்படை பயிற்சி பெற்றனர். களப்பயிற்சிக்காக இவர்கள் போலீஸ்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 10 பெண் எஸ்ஐக்கள் உட்பட 29 பேர் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் ஏப்ரல் 1ம்தேதி முதல் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கான கடிதத்தை மாவட்ட எஸ்பி சாம்சன் அளித்து, போலீஸ்நிலையங்களுக்கு அனுப்பிவைத்தார். இவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.