குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
3/28/2017 3:00:47 PM
பள்ளிப்பட்டு- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கீச்சலம் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில நாட்களாக சரிவர தண்ணீர் கிடைக்காமல் கீச்சலம் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி ஊராட்சி செயலரிடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதட்டூர்பேட்டை, திருத்தணி சாலையில் கீச்சலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு உருவானது. இதுபற்றி பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.