இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாளை மறுநாள் தீபா பிரசாரம் - தேர்தல் அறிக்கை வெளியிடவும் திட்டம்

3/25/2017 12:57:19 PM
நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சென்னை- சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக இந்த தேர்தலில் மூன்று அணிகளாக களம் காண்கிறது. இதன்படி சசிகலா, ஓபிஎஸ், தீபா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களை திரட்டி தேர்தலை சந்திக்கின்றனர். தீபாவை பொறுத்தவரை எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அன்று முதல் ஆர்.கே.நகரில் நான் போட்டிடுவேன் என தீபா கூறி வந்தார். அதன்படி, தற்போது தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், தீபா மனுத்தாக்கல் செய்ததில் இருந்து மனு பரிசீலனை முடியும் வரை பெரும் பரபரப்பு நீடித்தது. அதாவது அவரது மனு தள்ளுபடியாகும் என்றுகூட பரபரப்பாக பேசப்பட்டது.

ஏற்கனவே, ஆர்.கே.நகரில் நான் போட்டியிடக்கூடாது என்பதற்காக சசிகலா குடும்பத்தினர் தன்னை கூலிப்படை ஏவி மிரட்டுவதாக தீபா குற்றம்சாட்டினார். எனவே, இந்த மனு தள்ளுபடி தகவலுக்கு பின்னால் பெரிய சதி இருக்கலாம் என தீபா எண்ணினார். இதையடுத்து தன் வக்கீல் குழுவை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி, சந்தேகப்படும்படியான தகவலுக்கு முழு விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டார். நீண்ட நேர பரபரப்புக்கு பிறகு நேற்று மாலை தீபாவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபாவுக்கு எந்த சின்னம் கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

படகு, பேனா, திராட்சை கொத்து, மெழுகுவர்த்தி உள்ளிட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தீபா கோரிக்கை வைத்தார். அவருக்கு வரும் 27ம் தேதி அன்று சின்னம் வழங்கப்படுகிறது. சின்னம் கிடைத்தவுடன் தீபா, ஆர்.கே.நகரில் பிரசாரம் தொடங்க உள்ளதாக பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அன்றைய தினம் தனது வீட்டில் ஆர்.கே.நகர் தேர்தல் அறிக்கையையும் தீபா வெளியிடுகிறார். அதில், இளைஞர்கள், பெண்கள், மாணவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவின் திடீர் சுறுசுறுப்பு காரணமாக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும் சில
  • இலங்கை அதிபருடன் ரஜினி பேசவேண்டும் - செங்கை பத்மநாபன் அறிக்கை



  • மருத்துவமனையில் ரவுடி சாவு - கண்ணகிநகரில் போலீஸ் குவிப்பு



  • அயப்பாக்கத்தில் 1000 பேருக்கு இலவச தொழில் பயிற்சி: நாசே நிறுவனம் ஏற்பாடு



  • உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர்கள் நேரடியாக பணம் பட்டுவாடா - தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்



  • தினகரன் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு - அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி உத்தரவு



  • அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஆஜராக விலக்கு கோரிய டிடிவி தினகரன் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 4 பேர் பரிதாப பலி



  • திருவள்ளூர் அருகே செல்போன் பேசியபடி 3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலி



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 3 பேர் பரிதாப பலி



Facebook

Twitter

கோலிவுட்டில் தமன்னா கவனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]