இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிரசாரத்தின்போது நலச்சங்கங்களை புறக்கணிக்கும் டிடிவி.தினகரன் - சசிகலா அணியினர் விரக்தி

3/25/2017 12:56:21 PM
நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

திருவொற்றியூர்- தேர்தல் பிரசாரத்தின்போது நலச்சங்க நிர்வாகிகளை டிடிவி. தினகரன் புறக்கணிப்பதால் சசிகலா அணி தரப்பினர் கடும் விரக்தியில் உள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக, அதிமுக அணியினர் பாஜ, தேமுதிக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக இரண்டாக உடைந்ததால் அந்த கட்சி சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. இதனால் சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, தொப்பியை அணிந்தபடி டிடிவி.தினகரன் பிரசாரத்தை துவங்கினார். தண்டையார்பேட்டை, நேதாஜி நகரில் நேற்று டிடிவி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இன்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி.தினகரன் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஆர்.கே.நகரில் முஸ்லிம் அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், பொது நல அமைப்புகள், பல்வேறு வியாபாரிகள் மற்றும் சமூகநலப் பேரவை, இளைஞர் பேரவை என ஏராளமானவை உள்ளன. இந்த அமைப்பின் நிர்வாகிகளை திமுக வேட்பாளர் மருதுகணேஷ், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், ஆகியோர் சந்தித்து ஆதரவு திரட்டினர். இதுபோல் பாஜ வேட்பாளர் கங்கை அமரனும் அந்த அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால், இன்றுவரை அவர்களை தினகரன் சந்தித்து ஆதரவு கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இப்படி பிரசாரம் செய்தால் எப்படி வெற்றிப்பெற முடியும்? என்று சசிகலா அணி தரப்பினர் கடும் விரக்தியில் உள்ளதாக தெரிகிறது.

மேலும் சில
  • இலங்கை அதிபருடன் ரஜினி பேசவேண்டும் - செங்கை பத்மநாபன் அறிக்கை



  • மருத்துவமனையில் ரவுடி சாவு - கண்ணகிநகரில் போலீஸ் குவிப்பு



  • அயப்பாக்கத்தில் 1000 பேருக்கு இலவச தொழில் பயிற்சி: நாசே நிறுவனம் ஏற்பாடு



  • உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர்கள் நேரடியாக பணம் பட்டுவாடா - தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்



  • தினகரன் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு - அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி உத்தரவு



  • அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஆஜராக விலக்கு கோரிய டிடிவி தினகரன் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 4 பேர் பரிதாப பலி



  • திருவள்ளூர் அருகே செல்போன் பேசியபடி 3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலி



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 3 பேர் பரிதாப பலி



Facebook

Twitter

கோலிவுட்டில் தமன்னா கவனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]