இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அங்கீகாரம் இல்லாத மனைப்பதிவு அறிக்கை அளிக்க ஐ.ஜி உத்தரவு - பதிவுத்துறையில் பரபரப்பு

3/25/2017 12:42:24 PM
நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சென்னை- ஐகோர்ட் உத்தரவை மீறி, அங்கீகாரம் இல்லாத மனைப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 15க்குள் அறிக்கை அளிக்க பதிவுத்துறை ஐஜி செல்வராஜ் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விளை நிலங்களில் அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடந்த செப்டம்பர் 8ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி அலுவலகம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி அங்கீகாரம் இல்லாத மனைகளில் பத்திரம் பதிவு செய்யக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதையும் மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐஜிக்கு புகார் வந்ததை தொடர்ந்து, கடந்த நவம்பரில் லே அவுட் அப்ரூவல் இல்லாத மனைகளில் பத்திரம் பதிவு செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத மனைகளில் வீடு வாங்கிய பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பத்திரப்பதிவு செய்ய உயர் அதிகாரிகளை அணுகினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ரூ.20 லட்சம் வரை பத்திரத்திற்கு கமிஷன் பெற்றுக்கொண்டு பத்திரம் பதிவு செய்தனர். குறிப்பாக, நீலாங்கரை, தாம்பரம், கும்பகோணம், அதிராமப்பட்டினம், அய்யம் பேட்டை உட்பட  100க்கும் மேற்பட்ட சார்பதிவு அலுவலகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, கொடைக்கானல் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அவரது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து, ‘தமிழகம் முழுவதும் இதுபோன்ற பத்திரப்பதிவு நடந்து வரும் நிலையில், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்’ என்று அவர் கேள்வி எழுப்பி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் பேரில், கடந்தாண்டு செப்டம்பர் 9க்கு பிறகு அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்யப்பட்ட சார்பதிவு அலுவலகங்களின் முழு விவரங்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பதிவுத்துறை ஐஜி செல்வராஜ் அனைத்து மண்டல டிஐஜிக்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘டிடிசி, சிஎம்டிஏ அப்ரூவல் இல்லாத எந்த மனையாக இருந்தாலும், பத்திரம் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது தொடர்பான முழு விவரங்களையும் பதிவுத்துறை தலைமைக்கு வரும் ஏப்ரல் 15க்குள்  அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. பதிவுத்துறை ஐஜியின் இந்த திடீர் உத்தரவு பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • இலங்கை அதிபருடன் ரஜினி பேசவேண்டும் - செங்கை பத்மநாபன் அறிக்கை



  • மருத்துவமனையில் ரவுடி சாவு - கண்ணகிநகரில் போலீஸ் குவிப்பு



  • அயப்பாக்கத்தில் 1000 பேருக்கு இலவச தொழில் பயிற்சி: நாசே நிறுவனம் ஏற்பாடு



  • உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவீர்கள்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதி உத்தரவு



  • ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர்கள் நேரடியாக பணம் பட்டுவாடா - தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்



  • தினகரன் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு - அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி உத்தரவு



  • அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஆஜராக விலக்கு கோரிய டிடிவி தினகரன் மனு தள்ளுபடி: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 4 பேர் பரிதாப பலி



  • திருவள்ளூர் அருகே செல்போன் பேசியபடி 3வது மாடியில் இருந்து தவறிவிழுந்த கொத்தனார் பலி



  • சேலம் அருகே அதிகாலை விபத்து: 3 பேர் பரிதாப பலி



Facebook

Twitter

கோலிவுட்டில் தமன்னா கவனம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]