படப்பிடிப்பு அரங்குகள் எரித்து மர்ம நபர்கள் தாக்குதல்: தீபிகா படுகோன் நழுவல்
3/25/2017 12:18:02 PM
தீபிகா படுகோன், ரன்பீர் நடிக்கும் இந்தி படம் பத்மாவதி. சன்சய் லீலா பன்சாலி இயக்கு கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான், மும்பையில் நடந்தபோது மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இயக்குனர் உள்ளிட்ட பட குழுவினர் தாக்கப்பட்டது டன், படப்பிடிப்பு அரங்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்தபோதும் படத்தில் நடிக்கும் தீபிகாபடுகோன் எந்த கருத்தும் தெரிவிக் காமல் மவுனம் சாதித்து வந்தார்.
சமீபத்தில் பத்மாவதி படம் பற்றி பேட்டி அளித்தார் தீபிகா. அவர் கூறும்போது, ‘என்னிடம் மறைந்திருக்கும் ஆக்கப்பூர்வமான திறமையை இப்படம் மூலம் இயக்குனர் வெளிக்கொண்டு வருவார். காட்சிகளில் நடிக்கும்போது அந்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நீண்ட நாள் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் ஒரு நட்சத்திரம் பணியாற்றுவது என்பது இருவருக்குமே சவாலான விஷயம். இருவருமே தங்களிடமிருந்து புதிதாக ஏதாவது ஒரு அம்சத்தை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது’ என்றார்.படக்குழு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதுபற்றி தீபிகாவிடம் கேட்டபோது, அதுபற்றி கமென்ட் தெரிவிக்க மறுத்து அங்கிருந்து நழுவிச் சென்றார்.