மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் துண்டுபிரசுரம் விநியோகம்
3/24/2017 4:58:55 PM
ஆலந்தூர்- தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கு மற்றும் பெட்ரோல், டீசல், காஸ், விலை உயர்வு, மீனவர் படுகொலை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து பழவந்தாங்கல் பகுதியில் வீதி, வீதியாக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி பழவந்தாங்கலில் நேற்று தொடங்கியது. இதற்கு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். காங்கிரஸ் சிறு பான்மை துறை மாநில துணைத்தலைவர் பிரின்ஸ் தேவ சகாயம், துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். இதில், பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.