இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வேலூர் ஏர்போர்ட்டுக்கு தமிழக அரசு ஒப்புதல்

3/22/2017 3:01:22 PM
வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை ஓட்டு இயந்திர தில்லுமுல்லு விவகாரம் தேர்தல் ஆணையத்தின் சவால் வெறும் கண்துடைப்பு நாடகம்: என்சிபி குற்றச்சாட்டு

வேலூர்-நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நாட்டில் கைவிடப்பட்ட 42 சிறிய விமான நிலையங்களை சீரமைத்து பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதில் தென்னகத்தில் ஐதராபாத் மற்றும் செகந்திராபாத் என 2 சிறிய விமான நிலையங்களும், வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையம் என 3 விமான நிலையங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. முதற்கட்டமாக சுமார் ₹7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது.

விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி கிடைத்த நிலையிலும், தமிழக அரசின் தடையில்லா சான்றுடன் கூடிய ஒப்புதல் கடிதம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வேலூர் விமான நிலையம் சீரமைக்கும் பணி 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது. அவ்வப்போது இங்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் வேலூர் விமான நிலையம் திறப்பதற்கான பூர்வாங்க பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வந்த மத்திய விமான போக்குவரத்து இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் சென்னை தலைமை செயலக அதிகாரிகளை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து, வேலூர் விமான நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி அளித்துள்ளனர்.இதுகுறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘ வேலூர் விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றுடன் கூடிய ஒப்புதல் கடிதத்தை தலைமை செயலக அதிகாரிகள் வழங்கினர். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்’ என்றனர்.

மேலும் சில
  • வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை



  • தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது



  • படத்தில் பணியாற்றிய வேலுபிரபாகரன்- ஷெர்லி கைப்பிடித்தனர் 60 வயது இயக்குனர்-35 வயது நடிகை திடீர் திருமணம்: சிறப்பு காட்சியில் பரபரப்பு



  • கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு



  • இந்தியாவின் அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ல் விண்ணில் பயணம்: இன்று மாலை கவுன்டவுன் அறிவிப்பு



  • தங்கம் பவுனுக்கு 248 உயர்ந்தது



  • பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு



  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]