காந்தி தேசம் டிரஸ்ட் கூட்டம்
3/9/2025 2:28:14 PM
சென்னை- காந்தி தேசம் சோஷியல் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் “பெண்களை காப்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பில் நேற்று நடந்தது. டிரஸ்ட் இணை செயலாளர் வே.ல.கந்தசாமி தலைமை வகித்தார். எம்.தங்கராஜன் முன்னிலை வகித்தார். சமூக சேவகர் நிறுவன தலைவர் ஆர்.ஆர்.நாகராஜன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், பெண்களின் மனவலி, உடல் வேதனை, அதற்கான தீர்வு பற்றி விளக்கி பேசினர்.
இதில், ஜிடிடி மகளிர் பிரிவு தலைவி ஆர்.என்.சிவரஞ்சனி, ஜிடிடி ஆந்திர மாநில மகளிர் பிரிவு தலைவி ஆர்.சாய்துர்கா, டிரஸ்ட் பொதுச்செயலாளர் எஸ்.பாஸ்கர், செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.கே.மாதவன் நன்றி கூறினார்.