இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள பீச் நட்சத்திர ஓட்டலில் எம்எல்ஏக்கள் கைகலப்பு; நீச்சல் குளத்தில் 5 பேர் மூழ்கியதால் பரபரப்பு

2/10/2025 5:49:55 PM
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 73 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா குடும்பம் அபகரிக்க விடமாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை- அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு ரிசார்ட்ஸ் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் சசிகலா ஆதரவாளர்கள் கடும் கெடுபிடி காட்டி வருவதால் எம்எல்ஏக்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பதவியை பிடிப்பதில் பன்னீர்செல்வம்-சசிகலாவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்பத்தில் சசிகலாவை ஆதரித்து வந்த முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அதன்தொடர்ச்சியாக அதிமுகவில் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. இதனால் சசிகலா முதல்வராவதில் சிக்கல் ஏற்படவே அதிமுக எம்எல்ஏக்களை அவர் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். எம்எல்ஏக்களை 4 சொகுசு பஸ்சில் ஏற்றி கல்பாக்கம் அடுத்து உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்சில் தங்க வைத்துள்ளனர். எம்எல்ஏக்கள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளதாக தகவல் கிடைத்ததால் சசிகலா நியமித்த பாதுகாவலர்கள் அவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

அவர்கள் ஓட்டலின் உள்ளே, வெளியே மற்றும் அந்த பகுதியை சுற்றிலும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். எம்எல்ஏக்கள் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களிடம் அனுமதி பெற்றுதான் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட பேசுகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாராவது பேசி தங்கள் பக்கம் இழுத்துச் சென்று விடக்கூடாது என்பதற்காக அதிகளவில் கெடுபிடி காட்டப்படுகிறது. மேலும், அப்பகுதியில் மக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது போல் மன்னார்குடி பாதுகாவலர்கள் கடும் கெடுபிடிகள் செய்கின்றனர். இதனால், கிராம மக்கள் சகஜமாக கடைவீதிகளுக்கு சென்று வர முடியவில்லை. யாராவது சென்றால், ‘‘நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்? எதற்கு செல்கிறீர்கள்? என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பத்திரிகையாளர்களும் சசிகலா ஆதரவாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலையில் கிராம மக்கள் கோபமாகி, சசிகலா ஆதரவாளர்களுடன் தகராறு செய்தனர். இதனால் சசிகலா தரப்புக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அங்கு வந்த திண்டிவனம் நகர முன்னாள் சேர்மன், ‘‘இரவு 7 மணிக்கு எல்லா எம்எல்ஏக்களும் சென்று விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் சகஜமாக சென்று வரலாம்’’ என்று கூறி மக்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் இரவும் எம்எல்ஏக்கள் அங்கேயே இருந்ததால், தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அமைச்சர்கள் எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரின் வாகனங்கள் மட்டும் வெளியே வந்தபடியும், உள்ளே சென்றபடியும் இருந்தன.

இந்த நிலையில், எம்எல்ஏக்கள் தொடர்ந்து அங்கேயே சிறை வைக்கப்பட்டுள்ளதால் இன்றும் சசிகலா தரப்பினர் அப்பகுதி மக்களிடம் கெடுபிடி காட்டினர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களுக்கு செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும், இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர். அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். கோல்டன் பே ரிசார்ட்சில் நீச்சல் குளம், பார் என சகல வசதிகளும் உள்ளது. நேற்றிரவு சில எம்எல்ஏக்கள் மது அருந்திவிட்டு நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போட்டுள்ளனர். அதில் 4,5 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை மற்ற எம்எல்ஏக்கள் சேர்ந்து மீட்டுள்ளனர். மேலும், நேற்று பிற்பகல் முதல் சுமார் 20 முதல் 30 எம்எல்ஏக்கள், ‘‘எங்களை ஏன் அடைத்து வைத்துள்ளீர்கள்? செல்போனை கொடுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். ‘‘எங்களை சுதந்திரமாக விடுங்கள். நாங்கள் வேறு அணிக்கு ஓடமாட்டோம்’’ என்று மன்னார்குடி பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறு நேற்று இரவு வரை நீடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை கண்காணிப்பு
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு எம்எல்ஏவுக்கு தலா 5சி வரை பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. முதல் கட்டமாக பாதி தொகையும், சசிகலா முதலமைச்சராக ஆனவுடன் மீதி தொகையை தருவதாகவும் பேசி முடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது வரை பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் எம்எல்ஏக்களின் வீடுகள், தற்போது எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்ஸ்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் சில
  • புதுவையில் முதன் முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி



  • சேலம் மாஜி எம்எல்ஏக்கள் 4 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவு



  • தமிழகத்தில் அரசியல் நெருக்கடியால் கேரள, கர்நாடக அரசுகள் அத்துமீறல்; பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு



  • கவர்னர் முடிவெடுக்க போதிய அவகாசம் தேவை; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ‘முசிறி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏக்களை காணவில்லை’ முன்னாள் டிஜிபி நட்ராஜை மீட்க கோரிக்கை



  • ரேஷன் கடைகளில் அரிசியை குறைத்து கோதுமை வழங்க நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு



  • சசிகலாவின் முயற்சியை ஜெ ஆன்மா மன்னிக்காது; சங்கரன்கோவில் மாஜி பெண் எம்எல்ஏ ஆவேசம்



  • வங்கி அதிகாரி டார்ச்சரால் விவசாயி தற்கொலை; விவசாயிகள் விஷம் குடிக்கும் போராட்டம்



  • சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி



  • வெளிநாட்டில் பதுங்கியுள்ள காஞ்சி. ரவுடியின் ரூ.21கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை



Facebook

Twitter

பாம்புடன் போஸ் கொடுத்த நடிகை கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]