ஹீரோயின் தேடும் ஹரி உதவியாளர்
2/10/2025 5:38:10 PM
வெள்ளை பன்றி குட்டியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து ஜெட்லி என்ற படம் உருவாகிறது. 3டி தொழில்நுட்பத்தின் மற்றொரு பரிமாணமான ஐ மேக்ஸ் முறையில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கும் ஜெகன்சாய் அடுத்து இடி மின்னல் புயல் காதல் என்ற படத்தை தயாரிக்கிறார். ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய யோகேந்திரன் இயக்குகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,’இளம்பருவ காதலை மையமாக வைத்து யதார்த்தமான திரைக்கதையுடன் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இதற்கு இப்படியொரு டைட்டில் வைக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். அதற்கான காரணம் படத்தில் தெரியும். புதுமுகம் திராவிடன் ஹீரோ. இதில் நடிக்கும் ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. துலீப்குமார் ஒளிப்பதிவு. சி.சத்யா இசை அமைக்கிறார்’ என்றார்.