இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் விவகாரம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; சுதந்திரமாக செயல்படாதது ஏன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி

2/10/2025 5:20:18 PM
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 73 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா குடும்பம் அபகரிக்க விடமாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

சென்னை- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபரில் நடைபெறவிருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி, தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்து உள்ளாட்சி தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மூர்த்தி, ராம்மோகன் ராவ், எஸ்எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது திமுக வக்கீல் வில்சன் ஆஜராகி, ‘‘உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது.

நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்து, உள்ளாட்சி தேர்தலில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட கூடாது, தேர்தல் ஆணையம் முறையாக பரிசீலனை செய்து நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும், இடஒதுக்கீடு பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதன்பின், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் முடிந்து விட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.
தேர்தல் ஆணைய வக்கீல் பி.குமார் வாதிடும்போது, ‘’இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும். தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால், அரசு இதுவரை எந்த ஆவணங்களும் அளிக்கவில்லை. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார்.
இதைகேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணைய வக்கீலிடம் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.

நீதிபதிகள் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்புதானே. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். உங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. தேவையான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் பெறலாம். இதுவரை ஒரு பணியை கூட செய்யவில்லை. இதை கடுமையாக கண்டிக்கிறோம். தனிப்பட்ட அமைப்பு என்பதற்கு அர்த்தமே இல்லை. தேவைப்பட்டால் மாநில தேர்தல் ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம். வழக்கை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்று விரிவாக பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் சில
  • புதுவையில் முதன் முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி



  • சேலம் மாஜி எம்எல்ஏக்கள் 4 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவு



  • தமிழகத்தில் அரசியல் நெருக்கடியால் கேரள, கர்நாடக அரசுகள் அத்துமீறல்; பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு



  • கவர்னர் முடிவெடுக்க போதிய அவகாசம் தேவை; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ‘முசிறி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏக்களை காணவில்லை’ முன்னாள் டிஜிபி நட்ராஜை மீட்க கோரிக்கை



  • ரேஷன் கடைகளில் அரிசியை குறைத்து கோதுமை வழங்க நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு



  • சசிகலாவின் முயற்சியை ஜெ ஆன்மா மன்னிக்காது; சங்கரன்கோவில் மாஜி பெண் எம்எல்ஏ ஆவேசம்



  • வங்கி அதிகாரி டார்ச்சரால் விவசாயி தற்கொலை; விவசாயிகள் விஷம் குடிக்கும் போராட்டம்



  • சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி



  • வெளிநாட்டில் பதுங்கியுள்ள காஞ்சி. ரவுடியின் ரூ.21கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை



Facebook

Twitter

பாம்புடன் போஸ் கொடுத்த நடிகை கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]