இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

தோல்நோய்களை குணப்படுத்தும் மருத்துவம்

2/9/2025 2:22:06 PM
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 73 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா குடும்பம் அபகரிக்க விடமாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு எளிதான பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். படை, சொரி, சிரங்கு, கரப்பான் என்று சொல்லக்கூடிய தோல் நோய்களை போக்கும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். இப்பிரச்னைக்கு கொத்துமல்லி, பிரம்ம தண்டு, கருஞ்சீரகம், வல்லாரை ஆகியவை மருந்துகளாகின்றன. கொத்துமல்லியை பயன்படுத்தி தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கொத்துமல்லி இலைகளை நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறை தோலில் அரிப்பு, சிவப்பு தன்மை உள்ள இடத்தில் பூசிவர பிரச்னைகள் குணமாகும். அழற்சியால் ஏற்படும் தோல்நோய்கள் சரியாகும்.

ரத்தத்தில் கிருமிகளின் தாக்கம், அதிக பித்தம், உடல் உஷ்ணம் போன்றவற்றால் திடீரென தோலின்மேல் சிவந்த தன்மை, அரிப்பு ஏற்படுகிறது.  கை, கால், உடலில் எரிச்சலை கொத்துமல்லியின் சாறு அடக்குகிறது. குளிர்ச்சியை ஏற்படுத்தும். தோல் அரிப்பு சரியாகும். பிரம்ம தண்டுவை பயன்படுத்தி, அலர்ஜியால் தோலில் ஏற்படும் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பிரம்ம தண்டு இலை சூரணம் அரை ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் அதிமதுரம், சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர உடலில் ஏற்படும் தடிப்பு, எரிச்சல், அரிப்பு, நீர்கசிந்து துன்பம் தரும் தோல்நோய்கள் குணமாகும். மஞ்சள் நிறபூக்களையும், கடுகு போன்ற விதைகளை உடைய பிரம்ம தண்டு, நுண்கிருமிகளை அழிக்க கூடியது. பூஞ்சை காளான்களை போக்ககூடியது.

வல்லாரை, கருஞ்சீரகத்தை பயன்படுத்தி தோல்நோய்களுக்கு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதில், வல்லாரை இலையை பசையாக அரைத்து போடவும். இதனுடன் சிறிது கருஞ்சீரகம் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலத்தை பூசிவர தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும்.  
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வல்லாரை வாதம், பித்தத்தினால் ஏற்படும் தோல்நோய்களை போக்குகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருஞ்சீரகம், வயிற்று பூச்சிகளை அழிக்க கூடியது. சிறுநீரை பெருக்கி உடலில் ஏற்படும் நச்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.  

சிரங்கு இருக்கும்போது தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். கல்யாண முருங்கை இலை சாறுடன், சிறிது உப்பு சேர்த்து கலந்து இந்த சாறை பூசி 15 நிமிடங்களுக்கு பின்னர் கழுவிவர தோல் அரிப்பு சரியாகும்.
கல்யாண முருங்கை சிவந்த பூக்களை உடையது. இந்த இலைகள் நெஞ்சக சளியை கரைக்கும் தன்மை கொண்டது. இதை மாவில் இட்டு அரைத்து தோசையாக சாப்பிட சளி, மூட்டுவலி குணமாகும். நீரில் சிறிது உப்பு சேர்த்து குளித்துவர சொரியாசிஸ் உள்ளிட்ட தோல்நோய்கள் குணமாகும். இடைவிடாத ஏப்பத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். முறையற்ற உணவு, செரிமான கோளாறு போன்றவற்றால் ஏப்பம் வருகிறது. சோம்பு, பனைவெல்லம் சேர்த்து தேனீராக்கி குடித்துவர அடிக்கடி ஏப்பம்  வருவது நீங்கும். 

மேலும் சில
  • காய்ச்சலை தணிக்கும் கோரை கிழங்கு



  • நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்



  • புளி ஏப்பத்தை போக்கும் மருத்துவம்



  • வறண்ட சருமத்துக்கு மருந்தாகும் பருப்பு கீரை



  • கல்லீரலை பலப்படுத்தும் முள்ளங்கி



  • சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை



  • புண்களை ஆற்றும் பண்ணை கீரை



  • கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்



  • வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்



  • இருமலை போக்கும் மருத்துவம்



Facebook

Twitter

பாம்புடன் போஸ் கொடுத்த நடிகை கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]