இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சசிகலா முதல்வரானால் அமைச்சர் பதவியை வாங்க கோடிகளுடன் சுற்றும் எம்எல்ஏக்கள்; எந்த பதவியும் வேண்டாம்: ஓ.பி.எஸ். பிடிவாதம்

2/6/2025 4:55:07 PM
சசிகலா முதல்வராவதை எதிர்த்த வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைப்பு எதிரொலி; சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்படுவாரா? முதல்வருடன் தலைமைச் செயலாளர், டிஜிபி சந்திப்பு

சென்னை- ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வரானார். அவர் முதல்வராக இருந்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்று எம்எல்ஏக்கள், தொண்டர்களே வெளிப்படையாக கூறி வந்தனர். கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர்ந்து வருவதை  ஜீரணிக்க முடியாத சசிகலா, நேற்று திடீரென அதிமுக எம்எல்ஏக்களின் அவசர கூட்டத்தை கூட்டினார். இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக அவர் தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வருகிற 9ம் தேதி முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. சசிகலா முதல்வர் ஆனால், தற்போதுள்ள அமைச்சரவை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்படி தற்போது கதர்த்துறை அமைச்சராக உள்ள பாஸ்கரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள கருப்பண்ணன், விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்ட 6 அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

அவர்களுக்கு பதில், செங்கோட்டையன், தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, இன்பதுரை, தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல்வர் பதவியை இழந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் அல்லது சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தனக்கு சசிகலா தலைமையிலான ஆட்சியில் எந்த பதவியும் வேண்டாம் என்று ஓபிஎஸ் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார். இதனால் அவரை சரிக்கட்டும் வேலை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அமைச்சர்களாக இல்லாத பல எம்எல்ஏக்கள் எப்படியாவது சசிகலா அமைச்சரவையில் இடம்பெற்று விட வேண்டும் என்று கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலேயே தங்கி இருந்து காய் நகர்த்தி வருகிறார்கள். தற்போது, சசிகலாவுக்கு அவரது உறவினர்களே ஆலோசனை கொடுத்து, அதன்படி அதிமுக கட்சியை வழிநடத்தி வருகிறார்கள். இதில் முக்கியமாக டி.டி.வி.தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் தான் சசிகலாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

இதனால், இந்த இரண்டு பேரையும் சந்தித்து, எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் கொடுத்து எப்படியாவது மந்திரி பதவி வாங்கி விட வேண்டும் என்று சில எம்எல்ஏக்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, சசிகலா தலைமையில் தற்போது அமையவுள்ள ஆட்சியில் அமைச்சர் பதவி வாங்க முடியாவிட்டால், இனி தங்களால் எப்போதும் அமைச்சர் ஆக முடியாது என்று அவர்கள் கருதுகிறார்கள். காரணம், இனி தேர்தல் வந்தால் அதிமுக வெற்றிபெறுவது கடினம். அப்படியே வந்தாலும், தங்களால் எம்எல்ஏவாக முடியாது. அதனால், தற்போது எம்எல்ஏவாக இருக்கும்போதே, எப்படியாவது சசிகலாவுக்கு நெருக்கமானவர்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து அமைச்சர் பதவியை வாங்கி விட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். சில எம்எல்ஏக்கள், ஒரு குரூப்பாக செயல்பட்டு, எங்களில் யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும். இல்லையென்றால், சசிகலாவை ஆதரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று மிரட்டியும் வருவதாக கூறப்படுகிறது. இப்படி, அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவிக்காக சசிகலா உறவினர்களை சுற்றி சுற்றி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்



  • நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 4 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ திட்டம்; பரபரப்பு தகவல்கள்



  • திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் ஆவடி நாசர் அறிக்கை



  • அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைப்பு எதிரொலி; தலைமைச் செயலாளர், டிஜிபி முதல்வருடன் திடீர் ஆலோசனை



  • வடலூரில் இன்று தைப்பூச விழா 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்; பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு



  • ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ நீக்கம் - சசிகலா உத்தரவு



  • நட்சத்திர ஓட்டலில் சிறை வைப்பு; அதிமுக எம்எல்ஏக்களுக்கு இரவில் என்ன நடந்தது?



  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும்படி அமைச்சர் வளர்மதியை போனில் கலாய்த்த பெண்; பரபரப்பு தகவல் அம்பலம்



  • கோவிலம்பாக்கம் அருகே பஸ்சில் தவறி விழுந்து மாணவன் பலி



  • பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்; மெரினாவில் போலீசார் குவிப்பு



Facebook

Twitter

கடுகடுப்பான சோனியா அகர்வால்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]