இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

சிறுநீரக கற்களை கரைக்கும் சிறுகண்பீளை

2/2/2025 2:54:25 PM
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 73 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா குடும்பம் அபகரிக்க விடமாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

தோட்டத்தில், சாலையோரங்களில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீரக கற்களை கரைக்க கூடியதும், மாதவிலக்கு பிரச்னையை போக்கவல்லதும், புண்களை ஆற்றும் தன்மை கொண்டதுமான சிறுகண்பீளையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம். ஈரலில் ஏற்படும் பிரச்னையை சரிசெய்யும் அற்புதமான மருந்தாகிறது சிறுகண்பீளை. இது, உள் உறுப்புகளின் அழற்சியை போக்குகிறது. கற்களை கரைக்கும் வல்லமை உடையது. வெள்ளைபோக்கு பிரச்னையை குணமாக்கும். புண்களை ஆற்றக் கூடியதாக விளங்குகிறது. சீத, ரத்த கழிச்சலை நிறுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்துகிறது.

சிறுகண்பீளையின் பூக்கள், இலை, தண்டு, வேர் என அனைத்து பகுதிகளும் மருந்தாகிறது. தை மாதத்தில் அதிகம் கிடைக்கும் இந்த சிறுகண்பீளையை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, பனங்கற்கண்டு, பால். செய்முறை: சிறுகண்பீளையின் இலை, பூக்கள், தண்டு, வேர் ஆகியவற்றை அரைத்து பசையாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும். வலி குறையும். உடல் வலிமை பெறும். மாதவிலக்கால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, ரத்தசோகை, சோர்வு, உடல் மெலிவு போன்றவற்றுக்கு மருந்தாகிறது. சிறுகண்பீளையை கொண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, கருஞ்சீரகம், சிறுநெறிஞ்சில் பொடி, பனங்கற்கண்டு.

செய்முறை: சிறுகண்பீளை செடியை சிறுசிறு துண்டுகளாக்கி பாத்திரத்தில் போடவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் சிறுநெறிஞ்சில் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சிறுநீரக பை, சிறுநீர் பாதை, பித்தப்பை, ஈரல் ஆகியவற்றில் ஏற்படும் கற்கள் கரையும். இடுப்பு வலி, வயிற்று வலி, சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளியேறுதல், வாந்தி, குமட்டல் பிரச்னைகளை குணப்படுத்தும் மருந்தாக சிறுகண்பீளை விளங்குகிறது. சிறுகண்பீளையை பயன்படுத்தி புண்கள், கொப்புளங்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சிறுகண்பீளை, தேங்காய் எண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.

இதனுடன் சிறுகண்பீளை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை வடிக்கட்டி பூசிவர அடிபட்ட காயம், புண், அக்கிப்புண், கொப்புளங்கள் விரைவில் குணமாகும். புல்லோடு புல்லாக இருக்கும் சிறுகண்பீளை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. புண்களை வடு தெரியாமல் ஆற்றும் தன்மை கொண்டது. கொழுப்பை கரைக்க கூடியது. ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் மருந்தாக விளங்குகிறது. முகப்பருக்களை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு திருநீற்று பச்சை மருந்தாகிறது. திருநீற்று பச்சையை அரைத்து சாறு எடுத்து முகப்பருக்கள் மீது போடுவதால் பருக்கள் வடு தெரியாமல் மறைந்து போகும்.

மேலும் சில
  • காய்ச்சலை தணிக்கும் கோரை கிழங்கு



  • தோல்நோய்களை குணப்படுத்தும் மருத்துவம்



  • நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்



  • புளி ஏப்பத்தை போக்கும் மருத்துவம்



  • வறண்ட சருமத்துக்கு மருந்தாகும் பருப்பு கீரை



  • கல்லீரலை பலப்படுத்தும் முள்ளங்கி



  • புண்களை ஆற்றும் பண்ணை கீரை



  • கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்



  • வாயு தொல்லையை போக்கும் பெருங்காயம்



  • இருமலை போக்கும் மருத்துவம்



Facebook

Twitter

பாம்புடன் போஸ் கொடுத்த நடிகை கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]