திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
1/11/2025 3:01:56 PM
திருவண்ணாமலை - திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாத (மார்கழி) பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று இரவு 8 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, நாளை (12ம்தேதி) மாலை 6.15 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 2017ம் ஆண்டின் முதல் பவுர்ணமி என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.