இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பி.எச்.பாண்டியன், சைதை துரைசாமி ஆலோசனை? அதிமுகவில் அதிருப்தி அணி - சசிகலாவுக்கு பாடம் புகட்ட திட்டம்

1/6/2025 2:53:16 PM
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் உட்பட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு இலங்கை கடற்படை அடுத்தடுத்து அத்துமீறல் : தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

சென்னை - முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக யாரை நியமிப்பது என்ற விவாதம் அக்கட்சியினரிடையே எழுந்தது. அப்போது மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அதிகமாக இருப்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் பொதுச் செயலாளராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் அவைத் தலைவர் மதுசூதனன், செங்கோட்டையன், பொன்னையன், சைதை துரைசாமி போன்ற மூத்த தலைவர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவைச் சந்தித்தனர். சசிகலாவே கட்சித் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். சசிகலாவை சின்னம்மா என்றே அழைத்தனர். ஆனால், சைதை துரைசாமி மட்டும் ‘சசிகலாதான் முதல்வராக வரவேண்டும்’ என்று பெயர் சொல்லி அழைத்து வேண்டுகோள் விடுத்தார். இதை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சைதை துரைசாமி இனிமேல் போயஸ்கார்டன் பக்கம் வரக் கூடாது என பொன்னையன் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, சைதை துரைசாமியும் கார்டன் பக்கம் வருவதை நிறுத்திக் கொண்டார். கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், ஜெயலலிதா மரணமடைந்த 16வது நாள், வானகரத்தில் டிச.29ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் ஆகியவற்றுக்கு சைதை துரைசாமி வரவில்லை. சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா நேற்று முன்தினம் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்டச் செயலாளர் வி.என்.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், சைதை துரைசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர் வரக் கூடாது என மூத்த நிர்வாகிகளே கூறியுள்ளனர். தன்னை சசிகலா குடும்பத்தினர் ஓரம் கட்டுவதை அறிந்து அவரே ஒதுங்க ஆரம்பித்தார். எப்போதுமே தன்னை தலைமை ஒதுக்கி வைத்தால் எதிராக ஏதாவது செய்வது சைதை துரைசாமியின் வழக்கம் என கூறப்படுவதுண்டு.

அதிமுக இரண்டாக உடைந்தபோது ஜானகி அணியில் இருந்தார். பாக்யராஜ் கட்சி ஆரம்பிக்கும் போது அவருக்கு உதவினார். சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பிக்கவும் அவர் உதவினார். அதன்பின், 1996ல் ரஜினி, ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால், அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக கோடம்பாக்கத்தில் தனி அலுவலகமே ஏற்பாடு செய்தார். ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. கடந்த 1996ல் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதிமுக இரண்டாக உடைந்தது. திருநாவுக்கரசு, முத்துசாமி, கண்ணப்பன் போன்றோருடன் சேர்ந்து போட்டி அதிமுக உருவாக காரணமாக சைதை துரைசாமி இருந்தார். இரட்டை இலையை முடக்க டெல்லியில் மனு கொடுத்தார். பின்னர், அதிமுக ஒன்றாக இணைந்ததும் சைதை துரைசாமியும் சேர்ந்தார். அவருக்கு மேயர் பதவியையும் ஜெயலலிதா வழங்கினார். ஆனால், கடைசியாக ஜெயலலிதா அவரை ஓரங்கட்டியிருந்தார். அதற்கு சசிகலாதான் காரணம் என்று கருதி, சசிகலாவை சந்திக்காமல் ஒதுங்கியே இருந்தார்.

இந்த நிலையில், சசிகலாவால் ஓரங்கட்டப்படுவதால், மீண்டும் அதிமுகவை உடைக்கும் வேலைகளில் அவர் இறங்கிவிட்டார். இதற்காக தீபாவுடன் ரகசிய ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்களையும் அவர் ரகசியமாக சந்தித்து வருகிறார். அதிமுகவில் அதிருப்தி தலைவர்களை அவர் ஒன்று சேர்த்து விடுவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால், அதிமுகவில் இருந்து சைதை துரைசாமி விரைவில் நீக்கப்படுவார் அல்லது அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து அவரே கட்சியை உடைப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதேசமயம் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியை விட்டு விலகியே உள்ளார். அவரையும் சசிகலா தரப்பினர் ஓரங்கட்டியுள்ளனர். மேலும், சசிகலா தலைமையில் பணியாற்ற பி.எச்.பாண்டியன் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனாலயே அவர் இதுவரை சசிகலாவை சந்திக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அவரது மகன் மனோஜ்பாண்டியனும் இதுவரை சசிகலாவை சந்திக்கவில்லை. பி.எச்.பாண்டியன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் பி.எச்.பாண்டியனுடனும் சைதை துரைசாமி ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே 1991-96ல் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியசாமி தலைமையில் உருவான நல்லாட்சி இயக்கத்தில் பி.எச்.பாண்டியன், திருநாவுக்கரசர், சைதை துரைசாமியும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் உட்பட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு



  • இலங்கை கடற்படை அடுத்தடுத்து அத்துமீறல் : தமிழக மீனவர்கள் 10 பேர் கைது



  • ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மெரினா கடற்கரையில் பேரணி



  • விஜயகாந்துடன் போட்டோ எடுக்க ரூ.100 கட்டணம், கை விரலில் மை



  • திருப்போரூரில் புனுகு பூனை மீட்பு



  • ஊத்துக்கோட்டையில் வர்தா புயலால் சேதமான பகுதிகளை 25 நாட்களுக்கு பிறகு அமைச்சர் ஆய்வு - முற்றுகையிட்டு விவசாயிகள் குற்றச்சாட்டு



  • நாசே இலவச தொழிற்பயிற்சி மையம் நாளை துவக்கம்



  • வாகன பதிவு, லைசன்ஸ் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு - நேற்று முதல் அமலுக்கு வந்தது



  • ஸ்ரீ,ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்கள் குவிகின்றனர்



  • வர்தா புயல் பாதிப்பு கண்டுகொள்ளாத மத்திய அரசு - தா.பாண்டியன் தாக்கு



Facebook

Twitter

ஜாக்கிசானுக்கு விருந்து தருகிறார் தமிழ் நடிகை
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]