இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

2017ம் ஆண்டில் கோஹ்லி எட்ட வேண்டிய மைல்கல்கள்

12/26/2016 2:54:20 PM
சிகிச்சை பற்றிய தகவல்களை வெளியிடாததால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் திடீர் மறைவுக்கு காரணம் என்ன?; நீதிபதி சரமாரி கேள்விகள் பொதுச் செயலாளராக சம்மதம் அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா விரைவில் பொறுப்பேற்பார் - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் ‘கேரியரில்’ 2016 மிக முக்கியமான ஆண்டாக அமைந்து விட்டது. பல்வேறு சாதனைகளை இந்த ஆண்டில் அவர் படைத்து விட்டார். ஆனால் புதிதாக பிறக்கவுள்ள 2017ம் ஆண்டில் சில மைல்கல்களை அவர் எட்ட வேண்டியுள்ளது. இதை காண அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். டெஸ்ட் முச்சதம்: இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த டெஸ்டில், கோஹ்லி 235 ரன்களில் விளையாடி கொண்டிருந்தபோது, வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு, முச்சதம் கடக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்று விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்ற ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து கோஹ்லி ஆட்டமிழந்ததால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இதற்கு அடுத்து சென்னையில் நடந்த டெஸ்டில், இளம் கருண் நாயர் முச்சதம் அடித்து, சாதனை படைத்து விட்டார்.

எனினும் 2017ம் ஆண்டில், முச்சத கிளப்பில் கோஹ்லியும் இணைவார் என உறுதியாக எதிர்பார்க்கலாம். ஒரு நாள் இரட்டை சதம்: இதுவரை சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா ஆகிய இந்தியர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா, சதத்தை எப்படி இரட்டை சதமாக மாற்றுவது என்பதை நன்கு அறிந்த வைத்துள்ளார். இதேபோல் கோஹ்லியும், ஒரு நாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்னான 183ஐ கடந்து, இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கலாம். டெஸ்ட், ஒரு நாள் தரவரிசையில் முதலிடம்: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கும்போது, டெஸ்ட் தரவரிசையில் கோஹ்லி 15வது இடத்தில் இருந்தார்.

அந்த தொடரில் 655 ரன் குவிக்க, 875 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு முன்னேறினார். அவருக்கும், முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கும் இடையே 43 புள்ளிகள் வித்யாசம்தான் உள்ளது. ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் விராட் கோஹ்லி 848 புள்ளிகளுடன் 2ம் இடத்தில்தான் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சக வீரரான தென் ஆப்ரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 861 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2017ம் ஆண்டின் தொடக்கத்திலேயே டெஸ்ட், ஒரு நாள் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடத்தை எட்ட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். இதுதவிர சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடிக்க வேண்டும் என்பது உள்பட பல மைல்கல்களை விராட் கோஹ்லி எட்ட வேண்டியுள்ளது. இதற்கு எல்லாம் காலம்தான் பதில் சொல்லும்.

மேலும் சில
  • பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் - ஆஸ்திரேலியா முன்னிலை



  • குட் பை - 2016



  • அசார் அலி இரட்டை சதம் 443 ரன் குவித்து பாகிஸ்தான் டிக்ளேர்



  • குட் பை - 2016



  • 2016ம் ஆண்டில் டெஸ்டில் ஜொலித்த 5 இந்திய நட்சத்திரங்கள்



  • கால்பந்து வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான விமான விபத்து மனித தவறால்தான் நிகழ்ந்தது கொலம்பியா அறிவிப்பு



  • பாக். கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் சீக்கிய இளைஞர்



  • பாக்சிங் டே டெஸ்ட் அசார் அலியின் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு



  • முதல் ஒரு நாள் போட்டி - லதாம் சதத்தால் நியூசிலாந்து ரன் குவிப்பு



  • பாக்சிங் டே டெஸ்ட் - பாகிஸ்தான் நிதான ஆட்டம்



Facebook

Twitter

திரையுலகினர் மீது அதிருப்தி ; சுரேஷ் கோபி நடிப்புக்கு முழுக்கு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]