மாணவி பலாத்காரம்: மத போதகர் கைது
12/5/2025 2:17:47 PM
சேந்தமங்கலம், - நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளூக்குறிச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கபிலன். விவசாயி. இவரது மகள் தீபா (20, இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தீபா, பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி காலை கல்லூரிக்கு சென்ற தீபா, மாலை மீண்டும் வீடு திரும்பவில்ைல. அதிர்ச்சியடைந்த பெற்ேறார் இதுகுறித்து பேளூக்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
பேளூக்குறிச்சியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு தீபா அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு மத போதகராக இருந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்த சுரேந்திர மோகன் (40) என்பவர், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 1ம் தேதி ராசிபுரத்தில் இருந்து வத்தலகுண்டுக்கு தீபாவை அழைத்து சென்றார். அங்குள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டிற்கு கூட்டி சென்ற சுரேந்திர மோகன், தீபாவை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த தகவலை அறிந்த பேளூக்குறிச்சி போலீசார், நேற்று வத்தலகுண்டு சென்று, தீபாவை மீட்டனர். மத போதகர் சுரேந்திர மோகனையும் கைது செய்தனர்.