இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்

12/2/2025 3:14:54 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


பொன்னேரி, -ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 2 வாலிபர்கள் வாடகை காரில் மீஞ்சூருக்கு வந்தனர். காரை நெல்லூரை சேர்ந்த ரகமதுல்லா (45) ஓட்டி வந்தார்.பொன்னேரி வழியாக காணியம்பாக்கம், ரங்கநாதர் கோயிலின் பின்புறம் கார் வந்தபோது,   காரில் வந்த 2 பேர் ‘சிறுநீர் கழிக்க வேண்டும்’’ என்று டிரைவரிடம் கூறினர். இதனால் காரை டிரைவர் நிறுத்தினார். அப்போது அவர்கள் இருவரும், டிரைவர் ரகமதுல்லாவை சரமாரியாக தாக்கி, அவரது செல்போனையும் பறித்து கொண்டனர். பின்னர் காரை கடத்தி சென்றனர். இதன்பிறகு ரகமதுல்லா, காணியம்பாக்கத்தில் இருந்து சுமார் 6 கிமீ தூரம் நடந்து  மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தார்.

பொன்னேரி டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, எஸ்ஐக்கள் டில்லிபாபு, சந்திரசேகர், எஸ்எஸ்ஐகள் முனிவேல், கர்ணா, பழனி, ஏழுமலை ஆகியோர் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் மீஞ்சூர் பகுதியில் வினோத்குமார் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய ஜவகர் கும்பல்தான் காரை கடத்தி சென்றது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, மீஞ்சூர் பகுதியில் பதுங்கியிருந்த ஜவகர், மதன், உதயா, சக்திவேல் ஆகிய 4 பேரை நேற்றிரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு



  • முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்



  • திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு



  • திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]