இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்

12/2/2025 3:14:33 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


தாம்பரம், -முடிச்சூர் பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் தூர்வாராத தால் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அத்துடன் மழைநீரும் கலந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.சென்னை தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் ஒவ்வொரு மழையின்போது இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதும், அதில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதும் வழக்கம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்களும் பல்வேறு பொதுநலச் சங்கங்களும் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இப்பகுதியில் நேற்று பெய்த மழையால் இந்த சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் வழக்கம் போல கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, இதுகுறித்து தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இங்குள்ள மழைநீர் வடிகால்வாய்களை உடனடியாக தூர்வாரி, அவ்வழியாக மழைநீர் வெளியேற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு



  • மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்



  • திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு



  • திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]