‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
12/2/2025 3:12:51 PM
பாச நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறியிருக்கிறார் சன்னி லியோன். கடந்த 4 ஆண்டுக்கு முன் ஜிஸ்ம் 2 படம் மூலம் இந்தி படங்களில் நடிக்க வந்தவர், தொடர்ந்து ஏ படங்களிலேயே நடித்து வருகிறார். தமிழிலும் வடகறி படத்தில் குத்தாட்டம் போட்டார். இந்தி படங்களில் நடித்து வருவதுபற்றி அவர் கூறியது: பாலிவுட் என்றைக்கும் மாறாது என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் ‘அட்ஜெஸ்ட்’ செய்தாக வேண்டும் என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டேன். இதுபோன்ற உலகை இதுவரை நான் அறிந்ததில்லை. தொடர்ந்து பாலிவுட்டில் பணியாற்ற விரும்புகிறேன். தினமும் ஒரு புதுவிஷயத்தை கற்றுக்கொள்கிறேன். அது எனக்கு நகைச்சுவையாக உள்ளது.
எல்லா நேரத்திலும் போராட்டம் இருக்கிறது. அமிதாப்பச்சனாகவோ, கான் நடிகர்களாகவோ இருந்தால் மட்டுமே பாலிவுட்டில் நீடிக்க முடியும். ஒரு நடிகையாக பாலிவுட்டில் என் வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்காது. இதை நன்கு உணர்ந்துதான் இணைய தள வர்த்தகத்தில் எனது இ காமர்ஸ் புதிய ஆப் தொடங்கி இருக்கிறேன். இணைய தளத்தில் நான் ஒரு ‘பொருளாக’ இருக்கிறேன். அதுதான் என் பெயரை வளர்த்தது. நான் யார் என்பதை மக்கள் அதில் தெரிந்துகொண்டார்கள். நான் தொடங்கும் ஆப் மூலமாக என்னைப்பற்றி எல்லாவற்றையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடியும். அது பரவசமாகவும் இருக்கும். இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.